இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…
நம் அனைவருக்கும் சொந்தமானவர்.
இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
குருவிகளின் சத்தம்
கேட்பது
கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைந்துபோனது
சில் வண்டுகளும்
எங்கோ தொலைந்துபோனது
விழுதுகளுடன்
மரங்கள்
மட்டுமே
பேசிக்கொண்டிருக்கின்றன.
அருமை ஐயா.
நன்றி.
ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள்
அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’\\
இப்போதெல்லாம் சிட்டுக்குருவிகளை பார்க்கவே முடியவில்லையே! வருத்தமாக இருக்கிறது. எப்போதாவது பார்த்தால் கடவுளைப்பார்த்தது போல மகிழ்ச்சி கொள்ள வேண்டிய காலமிது. நன்றி.
குருவிகளடையும் மரங்களையும் வெட்டிச் சாய்த்து விட்டு, கூண்டுக்குள் காதல் சிட்டுக்கள் வளர்த்து திருப்திபட்டுக் கொள்ளும் காலமாகிவிட்டது. அவற்றையும் வீட்டுப்பூனைகளுக்குத் தாரை வார்த்து விட்டு, மர பொம்மையும், குருவி பொம்மையும் செய்யப் புகுவோமோ…