Category Archives: வண்ணதாசனின் அகமும் புறமும்

ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

This gallery contains 6 photos.

ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, … Continue reading

More Galleries | | 7 மறுமொழிகள்

மரபில்லாமல் புதுமையில்லை

This gallery contains 1 photo.

( தினமணி சுடர் – 11.07.1992 இதழில் வெளியான தி.க.சி.யின் பேட்டி ) உங்களது வாரிசான வண்ணதாசன் திறமைமிக்க இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்து வருகிறார். அந்த ஆர்வத்துக்கு உங்களின் பங்களிப்பு என்ன? உங்களது அப்பாவிடமிருந்து உங்களுக்கு எத்தகைய உதவி கிடைத்தது ? என் பையனுக்குப் படைப்புக் கலையில் எந்தவித உதவியையும் நான் செய்யவில்லை. மேலும் பணியின் நிமித்தமாக … Continue reading

More Galleries | | 3 மறுமொழிகள்

வண்ணதாசனின் ஓவியக் கைகள்

This gallery contains 1 photo.

{சிறுகதைகளில் ‘வண்ணதாசன்’ ஆகவும், கவிதைகளில் ‘கல்யாண்ஜி’ ஆகவும் அறியப்பட்டவர் கல்யாணசுந்தரம். தமிழ் இலக்கியச் சூழலில் அனைவருக்கும் நெருக்கமானவர். மிக எளிய, யதார்த்த மனிதர். திருநெல்வேலிக்காரர்.  ‘’அடுத்து நான் என்ன எழுதப் போகிறேன் என்பது என் முதல் வரிக்குக் கூடக் தெரியாது. எதையும் திட்டமிட்டு வாழ்பவன் நானில்லை’’ என்று சொல்லிக் கொள்ளும் இவர், கவிதை, சிறுகதைகளைத் தாண்டி … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

பிரதிபலிக்கும் நிஜ மாயை

This gallery contains 9 photos.

என்னுடைய 86 ஆண்டுகால வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்க்கும் பொழுது , தொடக்கத்தில் சிறுகதை ஆசிரியன் , கவிஞன் , மொழிபெயர்ப்பாளன் என்று கலை , இலக்கியத்தின் ஏணிப்படிகளில் ஒவ்வொன்றாக ஏறி , 2000 ஆண்டுக்கான மைய அரசின் திறனாய்வுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற பின் , கடந்த 20 ஆண்டுகால என்னுடைய வாழ்க்கையில் … Continue reading

More Galleries | | 1 மறுமொழி

நசுங்கிப் போனவை

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி http://www.vikatan.com/article.php?aid=9224&sid=255&mid=1 ‘நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது. என் நினைவில்    காடுகள் இருக்கின்றன!’ – என்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று முடிகிறது. நிறையப் பேர் நினைவில் காடுகள் இல்லை. தாவரங்கள் அற்ற ஒரு விநோதச் சூன்யத்தில் மூச்சுக் காற்று ஊளையிட்டுத் திரிகிறது. தொட்டுப் பேசுவதற்கு ஆள் இல்லை, விரல்கள் வெற்றுவெளியைத் … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

ஏக்கக் கடல்

This gallery contains 7 photos.

  எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,  எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?  அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,  முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,  எத்தனை ஊர்,  எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?  நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது  நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,  … Continue reading

More Galleries | | மறுமொழியவும்

வண்ணதாசனின் அகமும் புறமும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் உலகத்திலேயே அழகானவர்கள் யார் என்று கேட்டால், நரிக்குறவர்கள்தான் என்று சொல்வேன். பிறந்ததில் இருந்து அவர்கள் வளர வளர அழகாகிக்கொண்டே போகிறார்கள். சமீபத்தில், ஆனித் திருவிழாக் கூட்டத்தில் ஒருத்தரைப் பார்த்தேன். பழுத்த பழம் மாதிரி! ஒரு குச்சி ஐஸை வாங்கி தான் ஒரு வாய் உறிஞ்சி, தன் கையிலுள்ள பேரனுக்கு ஒரு வாய் கொடுக்கிறார். அவரின் … Continue reading

More Galleries | | 4 மறுமொழிகள்

போட்டோ

  வண்ணதாசன்

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 2 மறுமொழிகள்

நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா?

வண்ணதாசன் நேற்று நீங்கள் ஏதாவது கனவு கண்டீர்களா? நான் கண்டேன். சாதாரணமான கனவு அல்ல, புலிகள் நடமாடுகிற கனவு. மெத்து மெத்தென்ற மஞ்சள் முதுகும், வரிகளும், வால் சுழற்றலுமாக எங்கள் வீட்டு மாடி மீது அவை நடமாடுகின்றன. எங்கள் வீட்டில் அது வாடகைக்கு இருக்கிறதா, அல்லது அதிக வாடகை வரும் என்று கீழ்த் தளத்தை எங்களுக்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | 3 மறுமொழிகள்

ஆர்வங்களின் ஊற்றுக்கண்

வண்ணதாசனின் “அகமும் புறமும்” …

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும் | Tagged , , , , , , | 2 மறுமொழிகள்

நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் இருபத்திரெண்டு வருஷம் என்ன, இருநூறு வருஷம் ஆனால் கூடச் சில பேரை மறந்துவிட முடியாது. சில விஷயங்களை மறந்து விடமுடியாது. ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்” என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.    முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு‘ என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.    இளம் பச்சையில் ஒரு சால்வையைச் சரிபண்ணிக்கொண்டு கும்பிட்டபடி வருகிறார். … Continue reading

More Galleries | | 2 மறுமொழிகள்

கிரஹப் பிரவேசம்

கிரஹப் பிரவேசம் வண்ணதாசன் இப்போது இருக்கிற வீடு பெரியதோ,சிறியதோ…எப்படி இருந்தாலும் நாம் பால்ய காலத்தில் வாழ்ந்த ஒரு வீட்டின் ஞாபகத்துக்குள் நடமாடிக்கொண்டேதான் இருக்கிறோம். இந்த வீட்டின் ஏதோ ஓர் அறை, அறைகூட அல்ல; அறையின் ஒரு மூலை, எங்களுடைய 21.இ சுடலைமாடன் கோயில் தெரு  வீட்டை ஞாபகப்படுத்திவிடாதா என்று தான் தோன்றுகிறது. இந்த வீட்டு அலமாரியைத் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 3 மறுமொழிகள்

நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா?

வண்ணதாசன் நீங்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியரை  மனநிலை தவறியவராகப் பார்த்திருக்கிறீர்களா? உங்களோடு படித்தவர்களை அடையாளம் காண முடியாத தோற்றத்தில்… ஆனால், அடையாளம் காட்டுகிற அசைவுகளுடன் பக்கத்து நகரத்தின் சாலைகள் ஒன்றில் கண்டதுண்டா? நான் பார்த்திருக்கிறேன். நீங்களும் பார்க்கக்கூடும். அதற்கான சாத்தியங்களுடன்தான் இந்த வாழ்க்கையின் வெவ்வேறு கோணங்கள் இருக்கின்றன. உங்களின் இந்த தினத்தை மைனாக்களின் குரல்கள் திறந்துவைக்கின்றன. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 1 மறுமொழி

பற்களின் தேவதை….டூத் ஃபெய்ரி!

வண்ணதாசன் அகமும் புறமும்

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 2 மறுமொழிகள்

திரும்பி வராத தினத்தில்….

வண்ணதாசன் பல தினங்களுக்கு முன், என் நண்பருடைய வீட்டில் தங்கி இருந்தேன். வாரக்கணக்கில் எல்லாம் அல்ல; இரண்டு இரவுகள், ஒரு பகல் என்று வைத்துக்கொள்ளலாம். தினங்களின் எண்ணிக்கை அல்ல… அவற்றின் அடர்த்திதானே முக்கியம்! வாதா மரத்தைப் போல் இலைகளையே பூவாக ஆயுள் முழுவதும் காட்டியபடி எத்தனையோ மரங்கள் நிற்க, இந்தச் செம்பருத்தி மட்டும் தினசரி நான்கு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , | 1 மறுமொழி

கற்றது ‘மனம்’

பரமனுக்கு எல்லோரும் பழைய ஆள்தான். பார்த்த இரண்டாவது நிமிஷமே புதிய ஆளை அவன் பழைய ஆளாக்கிவிடுவான். ஆளுக்குத் தக்க பேச்சு எல்லாம் இராது. ஆனால், ஒவ்வொரு ஆட்களின் மடியிலும் பூப்போல கைப்பிள்ளையை உட்கார்த்திவைப்பது மாதிரி கொடுக்கிறதற்கு அவனிடம் ஒவ்வொன்றுஇருக்கும். அன்றைக்கு இரவு நல்ல மழை. சினிமாக் கொட்டகைக்குள் இருக்கும்போது பெய்கிற மழை ஒரு சாதாரண சினிமாவைக்கூட … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | மறுமொழியவும்

எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்: உள்ளங்கை எழுத்து-   எஸ்.ராமகிருஷ்ணன்   ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை. ‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , , | 2 மறுமொழிகள்

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?”

”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?” இந்தக் கேள்வி காதில் விழுகையில் நான் ஏழுவளவு தாண்டி, திருநாவுக்கரசு மாமா வீடு தாண்டிப் போய்க்கொண்டு இருக்கிறேன். பிறந்து வளர்ந்த வீடு இருக்கிற தெருவில் ரொம்ப வருடங்கள் கழித்து நடந்து போகிறவனுக்கு என்னவெல்லாம் மனதுக்குள் நிகழுமோ, அவ்வளவும் என்னுள் நிகழ்ந்துகொண்டு இருந்தது. மேட்டு வீடு என்றும், மாம்பழக் கடை ஆச்சி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , | 5 மறுமொழிகள்