வண்ணதாசன்….

வண்ணதாசன்….

https://vannathasan.wordpress.com/wp-admin/post-new.php

என் ரோம்பநாள் ஆசை வண்ணதாசன் பற்றி எழுதவேண்டும் என்பது.

இயற்பெயர் : கல்யாணசுந்தரம்.
கதைகளுக்கு : வண்ணதாசன்.
கவிதைகளுக்கு : கல்யாண்ஜி
வலைப்பூ : http://kalyaanji.blogspot.com (இது இப்போது இயங்கவில்லை)
விக்கி சுட்டி : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D

இவர் 80-களில் எழுதத் தொடங்கி இன்றும் எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு இளம் (என்னைப்பொருத்தவரையில்) படைப்பாளி.

இவரின் கதைகளும், கவிதைகளும் எப்போதும் அதிகபட்ச அன்பையே அடிநாதமாக கொண்டிருக்கும். ஒரு மிகச்சிறிய சம்பவத்தை வைத்துக்கொண்டு அதை மிக அழகாக படிப்பவரின் உள்ளத்தில் ஒரு மென்மையையும், அன்பையும் நிலைநிறுத்துவதில் இவருக்கு நிகர் எனக்கு தெரிந்து வேறு யாறுமில்லை. இவரின் கதைகளும் சரி கவிதைகளும் சரி இரண்டுமே நம்மைச்சுற்றி அன்பானவர்கள் தவிர வேறு யாறும் இல்லை எனும் நிணைப்பை நமக்குள் விதைக்கும்.

இவரின் கடிதத்தொகுப்பான “எல்லோருக்கும் அன்புடம்” – ம் இவரின் கவிதை போலவே மிக அன்பானதாய் இருக்கும். இவர் தன் ஒவ்வொரு கடிதத்தையும் முடிக்கும் வாக்கியமான எல்லோருக்கும் அன்புடன் என்பதே இவரின் ஆளுமையை எல்லோருக்கும் சொல்லும்படியாக இருக்கும்.

இவரின் கதைகள் எனக்கு அறிமுகமானது எனது பதின்ம வயதுகளில் “புளிப்பு கனிகள்” இவர் 80 -ன் தொடக்கத்தில் எழுதிய இந்த கதையை படித்தது 94-ல் தினமனி நாளிதழின் ஞாயிற்று கிழமைகளில் வரும் தினமனி கதிர் -ல். இந்த கதையை படித்த பிறகுதான் நான் இது போன்ற புத்தகங்களில் வரும் எனக்கு பிடித்த கதை, கவிதை, துணுக்குகளை சேகரிக்கும் பைத்தியம் பிடித்தது.

இந்த கதையில் ஒரு அழகிய கிராமத்து பெண்னின் வாழ்வை வேறொரு ஆணின் பார்வையில் சொல்லியிருப்பார். இன்னும் என்னால் அந்த மண் வீதியில் உருண்டு ஓடும் போகன்வில்லா பூவை மறக்க முடிவதில்லை – இப்போது இந்த கதை இருந்த பக்கங்கள் என்னிடம் இல்லை.

இவரின் இன்னுமொரு கதை “அப்பாவை கொன்றவன்” ஒரு குடும்பத்தலைவனை கொன்றவனின் மனம் என்னவாகும் என விவரித்து இருப்பார் கொலையானவனின் பெண்னை எல்லோரும் அவள் தாயின் பெயரை குறிப்பிட்டு அழைக்கும்போது அவர் மட்டும் அந்த பெண்னை அவளின் தகப்பனின் பெயர் கொண்டு அழைக்கும் அந்த ஒற்றை வார்த்தை தரும் உணர்வுகளே அந்த முழு கதையும்

இவரின் வரிகள் நம்மை ஒரு இயல்பான மாய உலகத்திற்கு இட்டுச்செல்லும்.

“காற்றின் அனுமதி” ஒரு மிக இயல்பான கதை ஒரு காலையில் தன் குழந்தையை நடக்க அழைத்துச்செல்லும் ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உரையாடல்கள்தான் கதையே

“மரங்கொத்திகளுக்கு மரங்கள் இருக்கிறபடியும், மீன் கொத்திகளுக்கு மீன்கள் , இருக்கும்படியான நியதியை இயற்கை இன்னும் அனுசரித்துதான் வருகின்றது”

மேலும் “நடுகை, தனுமை, பாபசஞ்சர் ரயிலும் ஆண்கள் பெட்டியும்” இப்படி நிறைய………

அவறைப்பற்றி எழுத்த தொடங்கினால் நீண்டுவிடுகின்றது.
மற்றொருமுறை அவரின் கவிதைகளுடன் பார்ப்போம்.

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து and tagged , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s