வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு

வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு

http://yalisai.blogspot.com/2008/09/blog-post_29.html

வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு -“நடுகை” படிக்க கிடைத்தது.இத்தொகுதியில் அமைந்த பெரும்பாலான கதைகள் மனித உறவுகளின் பாசாங்கற்ற இனிமையை சொல்லுபவை.சக மனிதர்களோடு முகம் கொடுத்து,நின்று பேச நேரம் இல்லாமல் இயந்திர ஓட்டத்தில் அடித்து செல்லப்படும் இன்றைய பொழுதில் இக்கதைகள் படிப்பதற்கு பெரும் ஆறுதலாய் உள்ளது.

* காற்றின் வெளி— ஒரு காலை பொழுதில் தன் மகளோடு சென்ற நடைபயணம் குறித்த பதிவு இது.வாகன பயணத்தை விட நடை பயணம் சுவாரசியமானவை..நான் மிக நெருக்கமானதாய் உணர்த்த கதை இது.கடை வீதிகளுக்கு செல்லும் பொழுதோ,சாலையை கடக்கும் பொழுதோ அப்பாவின் கைகோர்த்து செல்வது மிகுந்த விருப்பதிர்க்குறிய ஒன்று.சொல்லில் உணர்த்த முடியாத அன்பின் வெளிப்பாடாய் அக்கணங்கள் தோன்றும்.சிறுமியான தன் மகளின் வியத்தகு கேள்விகளும்,பார்பவர்களிடத்தில் எல்லாம் சிரித்து பேசும் குணமும்,குழந்தைகளுக்கே உண்டான ஆச்சர்யங்களும்,கேலிகளும் ஒரு தந்தையின் பார்வையில் சொல்லி இருப்பது நன்று.பால்ய காலந்தின் மீதான ஏக்கத்தை அதிகரிக்க செய்யும் விவரிப்புகள் அருமை.

 
* ஜோதியும் நானும் அந்த பையனும் – காதலிக்கு கொலுசு வாங்க கனவுகள் சுமந்து கடைக்கு செல்லும் நாயகன் அங்கு வறுமையின் காரணமாய் தான் வாங்கிய பரிசு கோப்பைகளை விற்று பணம் பெற கெஞ்சும் இளைஞனை கண்டு தான் வந்த காரியம் அற்பமானது என்பதை உணர்கிறான்…மனதை கனக்க செய்யும் இக்கதை உள்ளார்ந்த அர்த்தம் கொண்டது.

* மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது – வண்ணநிலவனின் மற்றுமொரு சிறுகதையான “கடைசியாய் தெரிந்தவர்கள்” போலவே இதுவும்,மன உளைச்சல் கொண்டு பரிதவிக்கும் நண்பனுக்கு ஆறுதலாய் உடன் இருந்து உதவிய கணங்களின் பதிவு.உறவுகள் மேம்படுவது கேளிக்கையான தருணங்களை காட்டிலும் துன்ப காலங்களிலேயே…

* நடுகை – நாமே எதிர்பாரா வண்ணம் சில அபூர்வ மனிதர்களை காண நேரிடும்.படிப்பு,வளர்ப்பு என்பதை உலக ஞானம் பெற்று அவர்கள் கூறுபவை யாவும் நிதர்சனங்களாய் ஒலிக்கும்.பயிர் செடிகளின் மீது பிரியம் கொண்ட மாடு மேய்க்கும் கிழவரூடான சம்பாஷனைகளே இச்சிறுகதை.

இச்சிறுகதை தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையே ஒரு அழகிய சிறுகதையை போன்றது.”இப்படியே கதை எழுதினாலும்,கவிதை எழுதினாலும்,கடிதம் எழுதினாலும் நேற்று வரை நடந்தவற்றை திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது” என கூறுகிறார்.இன்றைய பொழுதுகளின் இறுக்கத்தில் இருந்து விடுபட நினைவுகளின் பகிர்தல் மிக அவசியமானதே!!

வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு.  வெளியீடு – அன்னம் புக்ஸ்
விலை – 45 ரூபாய்

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் குறித்து. Bookmark the permalink.

One Response to வண்ணதாசனின் “நடுகை” – சிறுகதை தொகுப்பு

  1. Swaminathan சொல்கிறார்:

    நான் வாசித்த சிறுகதைத் தொகுப்புகளில் என்னை மிகவும் கவர்ந்த, நுட்பமான பல உணர்வுகளை மிக எளிய மனிதர்களின் உரையாடல் மூலமாக நான் மிக விரும்பும் எழுத்தாளர் திரு. வண்ணதாசன் எழுதியிருக்கும் தொகுப்புதான் – நடுகை. அதிலும் காற்றின் வெளி மற்றும் நடுகை மிகப் பிரமாதம்.
    அவர் எழுத்துக்களை போலவே மிக அருமையான மனிதரும் கூட. திருநெல்வேலியில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்து உரையாடிய ஒரு மணி நேரம், எனது சிறந்த தருணங்களில் நிச்சயமான ஒன்று.
    வாழ்வின் மீதும், எவர் மீதும் எந்த எதிர்மறை எண்ணங்களற்ற இவர் போல ஒருவரை நான் இதுவரை கேள்விப்பட்டதுகூட இல்லை.
    வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், அற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக வண்ணதாசனைப் படிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s