என் சக பயணிகள் – 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன்

என் சக பயணிகள் – 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் ச.தமிழ்ச்செல்வன்

காற்றின் முன்பக்கம் எது

இந்தக் கவிதைக்கு உண்டா

முன்பக்கம் பின்பக்கம் ?

-கல்யாண்ஜி

இதோ எனக்குச் சற்று முன்னாலும் காலத்தால் மட்டுமே எனக்குச் சற்றுப் பின்னாலும் என்னோடு இன்று நடந்து வரும் சக பயணிகளைப்பற்றிப் பேசிக் கொண்டிருப்பதுபோல மனதுக்குப் பிடித்த காரியம் வேறென்ன உண்டு?

vannadhasanகல்யாண்ஜி ஒரு கவிஞராகவும் அவரே வண்ணதாசனாக சிறுகதையாளராகவும் எனக்கு அறிமுகமானது 1970 ஆம் ஆண்டு. நான் கோவில்பட்டியில் கல்லூரிப்படிப்பைத் துவங்கிய ஆண்டில். சிற்றிதழ்களின் பொற்காலம் அது.எங்கள் ஊரிலிருந்தும் நீலக்குயில் என்கிற சிற்றிதழை திரு. அண்ணாமலை நடத்திக்கொண்டிருந்தார். என்னுடைய கவிதைகள் (!) அதில் வந்து கொண்டிருந்தன. நான் இலக்கியவாதிகளின் உலகத்துக்குள் பிரவேசித்த திகைப்பான காலம். நீலக்குயிலில் ரசிகமணி, கி.ரா., கு.அழகிரிசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன் போன்ற பல படைப்பாளிகளின் கடிதங்கள் தொடர்ந்து கடித இலக்கியம் என வந்துகொண்டிருந்தன.

அப்போது என்னை முதலில் வசீகரித்து இழுத்துக் கொண்டவை வண்ணதாசனின் சிறுகதைகளும் வண்ண நிலவனின் கடல்புறத்தில் நாவலும் தான். இலக்கிய உலகில் எனக்கு அப்பா கு. அழகிரிசாமி என்றால் என் உடனடி மூத்த சகோதரர்களாக எழுத்தின் வழி என்னை வழிநடத்தியவர்கள் வண்ணதாசனும் வண்ணநிலவனும் தான். அப்போது அவர்களை நான் நேரில் சந்தித்திருக்க வில்லை. அவர்களின் புகைப்படம் கூடப் பார்த்ததில்லை. கிருஷியின் வார்த்தைகளால் என் மனதில் உருவாகியிருந்த சித்திரங்களாகவே அவர்கள் எனக்குள் இருந்தார்கள். அன்றைக்கு அவர்கள் இருவரையும் விட உலகத்தில் எனக்கு நெருக்கமானவர்கள் வேறு யாருமே இல்லை என்று எண்ணிக்கிடப்பேன். இவ்வரியை எழுதும் இந்த நிமிடத்திலும் அந்த அதே நெருக்கத்தின் மூச்சுக்காற்றில் மனம் கரைகிறது. எழுத்தின் வழி மட்டுமே இத்தனை நெருக்கமாக ஒருவரை அடைய முடியும் என எனக்கு உணர்த்தியவர்கள் அவர்கள் இருவரும்தான். கு.அழகிரிசாமியை நான் வாசித்தது பிற்பாடுதான். கு.அழகிரிசாமியின் கையில் என்னைப் பிடித்துக் கொடுத்தவர் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துட்டேன் என்று மறைந்தும் விட்டார். அவர் எழுத்தாளர் ஜோதிவிநாயகம். வண்ணதாசனின் அப்பா, எங்கள் முன்னோடித் தோழர் தி.க.சி. யை எனக்கு அப்போது யாரென்றே தெரியாது. வண்ணதாசனின் பெயர்க்காரணம் பற்றிப் பின்னாட்களில் விசாரித்தபோதுதான் தி.க.சி. பற்றி அறிய நேர்ந்தது.

சேலம் பரந்தாமனின் கைவண்ணத்தில் அன்றைய தேதியில் பிரமிப்பூட்டும் அச்சாக்கத்தில் (சான்ஸே இல்லை) வண்ணதாசனின் முதல் கதைத்தொகுப்பு ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ வந்து எங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது

முழுகட்டுரையையும் படிக்க

http://www.keetru.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=21&Itemid=153

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து and tagged . Bookmark the permalink.

6 Responses to என் சக பயணிகள் – 1: கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன்

 1. jeyamohan சொல்கிறார்:

  தயவுசெய்து வண்ணதாசன் பற்றிய குறிப்பை மாற்றி அமைக்கவும். விருதுகளை வைத்து எழுத்தாளர்களை மதிப்பிடக்கூடாது. சாகித்ய அக்காதமி பரிசுபெற்றவர்கள் எல்லாம் வண்ணதாசனை விட மேலானவர்கள் என்ற எண்ணம் உருவாகிறது. சாகித்ய அக்காதமி அவருக்கு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அது ஒரு பரிசு அவ்வளவே. அவர் அதை விட பலமடங்கு மேலான படைப்பாளி. அவரது கதைகளின் தனித்தன்மையால் மட்டுமே அவர் அளவிடப்படவேண்டும்

 2. துளசி கோபால் சொல்கிறார்:

  இவரோட கதைகளைப் பற்றி என் தோழி கவிஞர் மதுமிதா ரொம்ப சிறப்பாப் பேசுவாங்க.

  எனக்குத்தான் இவருடைய எழுத்துகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைக்கலை.

  சென்னை வரும்போது இவரைத் தேடணும்.

 3. வடகரை வேலன் சொல்கிறார்:

  துளசி மேடம்,

  வண்ணதாசனைத் தேட நீங்க நெல்லைக்குத்தான் போகணும். காந்திமதி, நெல்லையப்பரை விட்டு அவர் எங்கும் வரமாட்டார்.

  உங்கள் பட்டியலை அனுப்புங்கள். நான் வாங்கி அனுபுகிறேன்.

 4. துளசி கோபால் சொல்கிறார்:

  தகவலுக்கு நன்றிங்க சுல்தான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s