ஒட்டுதல்-வண்ணதாசன்

ஒட்டுதல்-வண்ணதாசன்

ஒட்டுதல் 

வண்ணதாசன்

குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது.

துவைத்த உடைகளையும் வாளியையும் வைத்த கையோடு எப்போதும்போல அடுக்களையின் ஒரு பகுதியாக இருக்கிற பூஜை அலமாரியின் பக்கம் வந்து நின்றாள்.

எல்லாச் சாமி படங்களையும்விட ராம்பிரசாத்தின் படம் பெரியதாக இருந்தது. இன்றைக்கு மாலை ஒன்றும் போட்டிருக்கவில்லை. ஆனால் கண்ணாடிக்கு மேல் வைத்திருந்த குங்குமப் பொட்டு அளவுக்கு அதிகமாக நெற்றியை மறைத்துக் கொண்டிருந்தது.

ஒகனேக்கல் போயிருக்கும்போது எடுத்த படம். எதிர் வெயிலுக்கு முகம் சற்றுச் சுருங்கியிருந்தது. முழுப்படத்தில் இடதுபக்கம் மஹேஸ்வரியும் செஞ்சுலட்சுமியும் நிற்பார்கள். வலதுபக்கம் செஞ்சுலட்சுமியின் கணவர் இருப்பார். எப்போதும் புகைப்படம் க்ளிக் செய்யப் போகிற சரியான வினாடியில் எதையாவது சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்துவிடுகிறவர் செஞ்சுவின் கணவர்தான். சிரிக்கிற முகங்களே அழகு. புகைப்படங்களில் சிரிக்கிற முகங்கள் அதைவிட அழகுதானே.

ராம்பிரசாத் முகத்தைச் சுருக்கிக் கொண்டிருப்பதற்கு வெயில் மட்டும் காரணமில்லை.

முழு கதையையும் படிக்க> http://www.thinnai.com/?module=displaystory&story_id=10203243&format=html

http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_03.html

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , . Bookmark the permalink.

One Response to ஒட்டுதல்-வண்ணதாசன்

  1. Prabhuraj சொல்கிறார்:

    Hello Vannadhasan Sir,
    Today is my Bday.I feel happy today because you are in the Web.Even i created a website blog for u thought of approach you for the web support since i am web Expert.Great.I love you more than Me.

    Whenver i recall my name Vannadhasan,i am getting a cool freeze…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s