எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

வண்ணதாசன்: உள்ளங்கை எழுத்து-   எஸ்.ராமகிருஷ்ணன்  

ஏதேதோ ஊர்சுற்றி நான் அறிந்து கொண்ட நிசப்தத்தை வண்ணதாசன் தன் இருப்பிடத்தில் இருந்துகொண்டே அறிந்திருக்கிறார் என்பதற்குச் சாட்சியாக உள்ளது அவரது ‘கூறல்’ என்ற கதை.
‘ஒரு துண்டு தோசை வாயில் இருக்கிற நிலையிலே தாத்தா அழுவதைப் பார்த்துச் சகித்துக்கொள்ள முடியவில்லை’ என்று துவங்கும் இக்கதை, காது கேளாத ஒரு தாத்தாவைப் பற்றியது. வீட்டுக்கு வருபவர்களின் உதட்டசைவை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளும் திறன் பெற்றவராக இருந்தார் தாத்தா. மூப்பு அவரது பார்வையை மங்கச்செய்த போது சத்தம் நழுவி, உதட்டசைவும் நழுவி யார் வந்திருக்கிறார்கள் என்பதை உள்ளங்கையில் விரலால் எழுதிக் காட்டச் சொல்லிப் புரிந்துகொள்ளும் நிலை உருவாகிறது.

ஒரு நாள், ஊருக்குப் போயிருந்த அவரது மகனும் மருமகளும் வர, ஏன் தாமதமாகிறது என்ற காரணத்தை ஒருவரும் சொல்ல மறுக்கிறார்கள் என்ற கோபத்தில், ‘ஒண்ணையும் என்கிட்டே சொல்ல மாட்டேங் குறீங்க…’ என்று சொல்லியபடி எச்சில் வடிய அழுகையை அடக்க முடியாமல் சாப்பாட்டை பாதியில் வைத்துவிட்டு எழுந்துவிடுகிறார். இதைக் கண்ட பேத்திக்கு அழுகை முட்டுகிறது. இன்று வரை தாத்தா, பாஷை தன் பிடியைவிட்டு நழுவிச் செல்லும் போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் அதை இழுத்துக் கட்டிப்போட்டு வைத்திருந்தார். ஆனால், பேச்சை அறிந்துகொள்ள முடியாமல் போவது தன் இருப்பை அர்த்தமற்று போகச் செய்கிறது என்ற உண்மையை அவரால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.

எப்போதும் போல அவருக்குச் சவரம் செய்வதற்காக வரும் கிருஷ்ணன், பெரியவரை தான் சமாதானம் செய்து கூட்டிவருவதாகச் சென்று அவரது அவிழ்ந்து கிடந்த வேஷ்டியைக் கட்டிச் சாந்தப்படுத்தி சவரம் செய்யக் கூட்டி வந்து நாற்காலியில் உட்கார வைக்கிறான். அவரும் இரண்டு கைகளாலும் நாற்காலியைப் பற்றிக்கொண்டு அமர்கிறார். கால் பாதம் ஆடிக் கொண்டு இருக்கிறது. வெயில் கிருஷ்ணனின் கால்களில் படர்ந்து கொண்டு இருந்தது. தாத்தா சோப்பு நுரை அப்பிய முகத்துடன் அவனிடம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தார் என்று கதை முடிகிறது.

சொல் நழுவி, தொடுதல் மட்டுமே சாத்தியமான மூப்பின் அரிய காட்சி அது. கதை சொல்பவர், வெளிச்சம் பாறைகளில் நழுவிச் செல்வது போல கதையை அதன் போக்கில் செல்லவிட்டுப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஆதரவான ஒரு மனிதன் தோளைப் பிடித்துக் கூட்டி வந்தபோது தாத்தா மன ஆறுதலைப் பெற்றுவிடுகிறார். எல்லா நாட்களும் நடப்பது போலத்தான் அன்றைக்கும் சவரம் நடக்கிறது. ஆனால், அது ஒரு அபூர்வமான காட்சியைப் போல மாறிவிடுகிறது. காற்றில் பறக்கும் சோப்பு நுரை போல நிமிட நேரத்தில் கடந்து போய்விடும் வாழ்வின் அரிய காட்சி அது. அதை அப்படியே பதிவு செய்திருக்கிறார் வண்ணதாசன்.

நன்றி: முழு கட்டுரையையும் படிக்க- அழியாச்  சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_753.html

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to எஸ்.ராமகிருஷ்ணன்-உள்ளங்கை எழுத்து

  1. சுந்தர் சொல்கிறார்:

    வண்ணதாசனின் சிறுகதைகளை படித்தால் நாம் அனைவரும் நம்மை விரும்ப தொடங்கி விடுவார்கள். ஏனென்றால் நாம் மென்மையானவர்களாகவே மாறிவிடுவோம். எஸ்.ரா’வின் எழுத்தும் அப்படித்தான்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s