வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

http://blog.balabharathi.net/?p=805

இந்த 65வயதில் எனக்கவே, என் எழுத்தை படித்த வாசகர்களுடன், என் பேச்சை கேட்க வந்த ஒரு கூட்டத்தில் பேசுவது இது தான் முதல் முறை. உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது உரையைத் தொடங்கினார் வண்ணதாசன்.

* வந்திருந்தவர்களில் சிலருக்கு ஆனந்த விகடனில் தொடர் எழுதியபின் தான் இவரை அறிமுகமானவர்கள் இருந்தார்கள். இது பற்றி கூறும் போது, ராமகிருஷ்ணனுக்கு அறுபதினாயிரம் புதிய வாசகர்கள் கிடைத்திருப்பார்கள் எனில் எனக்கு ஒரு ஆயிரம் வாகசகர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்றார். அதிலும் அத்தொடர் வந்த பின் தன்னுடைய விற்காத பழைய புத்தகங்களை தேடி அவர்கள் வாங்கியதிலிருந்து இதைச்சொல்லுவதாக அவ்ர் சொன்னதும் கூட்டம் சிரித்தது.

* எழுதுவதற்கு இலக்கணம் அவசியமா என்று ஒரு கேள்விக்கு, வாழ்க்கையிலயே இலக்கணத்தை தொலைச்சுட்டோம். எழுத்துல யார் இப்ப அதெல்லாம் பார்க்குறாங்க. தேவையில்லைங்க என்றார். (முகத்தில் ஒரு வித இயலாமை அப்போது தோன்றியது)

* இணையத்தில் சில தளங்களைப் படிப்பதாகவும், ஆனால் இணையத்தில் நேரடியாக எழுதப்போவதில்லை என்றும் சொன்னார். கூடவே இணையம் தனது நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதாகவும், அதனாலேயே எழுதமுடியாமல் போய்விடுவதாகவும் சொன்னார். நாஞ்சில் நாடன் எழுத்துக்களைப் போல, தன்னுடைய எழுத்துக்களையும் சுல்தான் என்பவர் வலையேற்றி வருகிறார் அதுவே போதும் என்றும் சொன்னார்.

* இன்றைய இளைஞர்கள் ஒரு ஞாயிறு மதியப்பொழுதை இப்படி இலக்கியத்திற்காக செலவிடுவதைப் பார்க்கும்போது மகிச்சியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

* எழுத்தாளன் என்ற முறையில் நான் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இருப்பதை விரும்பவைல்லை. எப்போதுமே நான் சாதாரண மக்களில் ஒருவனாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொன்னார்.

* தன்னுடைய எழுத்து வாழ்க்கையிலிருந்தே பெறப்படுகிறது என்று அவர் கூறியதற்கு, உங்களுடைய கதைகளில் பெரும்பாலும் மென்மையான மனிதர்களே வருகிறார்கள். கடுமையான சொற்களை பயனபடுத்துபவர்கள் கூட இல்லையே என்று கேள்வி கேட்கப்பட்டது.., நான் என்னை சுற்றி இருந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்தே கதைகளை எழுதினேன். அவர்கள் அனைவருமே மென்மனதுக்காரர்களாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.

முழு கட்டுரையையும் படிக்க: http://blog.balabharathi.net/?p=805

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

One Response to வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க!-கேணி-அனுபவம்!!

  1. நிலாரசிகன் சொல்கிறார்:

    நிகழ்வு அருமையாக இருந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s