இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். .
நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.
வண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…
நம் அனைவருக்கும் சொந்தமானவர்.
இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.
கதையின் தலைப்பே மனக்கிளர்ச்சியை தருகிறது.
மரங்களையும் பறவையின் குரலையும் பிறித்தரிவது என்பது இதுவரையிலும் இயலாத விஷயமாய் இருக்கிறது எனக்கு.பறவைகள் இல்லாத போது மரங்களே பறவைகள் போல குரலெழுபுகிறதோ என்ற ஐயம் எனக்கு உண்டு.