ஒளியிலே தெரிவது

தி. சுபாஷிணி (செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை)
விருது (சுஜாதா) வாங்க வந்து, விருதிற்குப் பெருமை சேர்த்த நெல்லையின் வசந்தமிகு வண்ணதாசன் அவர்களுக்கு எங்கள் அன்பான வணக்கங்கள் பற்பல.
மேத்திங்கள் நான்காம் நாள் – அக்னி நட்சத்திரம் உதித்து, தன் உக்கிரத்தை உமிழத் தொடங்கிய முதல்நாள். அதன் வெப்ப அணைப்பில் தவிக்கத் தொடங்கியிருந்தது சென்னை. ஆனால் அது ஒரு பொருட்டல்ல என்று, அன்று மாலையில் சுஜாதாவின் அனைத்து வயது வாசகர்களும், வியர்வை நனி சொட்ட சொட்ட, பாவாணர் அரங்கத்தில் கூடியிருந்தனர். அமர இடம் இல்லாததும் அவர்களுக்கு இடையூறாக இல்லை என்பது இன்னொரு ஆச்சரியம்தான். உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளரும், கவிதை உலகில் தனக்கு ஒரு தனிஇடம் வகித்துக் கொண்டும், தமிழ்க் கவிதைகளை உலக அளவில் சமகாலத்திற்குப் புதுப்பித்துக் கொண்டிருக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன், சுஜாதா அவர்களைத் தொடர்ந்து நினைக்கும் வகையிலும், தன்னை மதித்து உயர்த்திய அவருக்கு நன்றி செலுத்தும் வகையிலும் வருடா வருடம் அவர் பெயரில் விருது வழங்கி விழா எடுக்கிறார்.
இம்முறை விருதை நீங்கள் பெற்றது எங்களுக்கு கூடுதல் இன்பம். விருது வழங்கும் திரு இந்திரா பார்த்தசாரதி, சிறப்புரை நல்கும் ஞானக்கூத்தன், மதன், எஸ். இராமகிருஷ்ணன், பாரதிகிருஷ்ணகுமார் ஆகியோருடன், விருது பெற வந்த ஜே.டி. குரூஸ், அழகியவன், ஸ்ரீநேசன், ஹரிகிருஷ்ணனுக்குப் பதிலாக வந்த அவரது நண்பர், யுவகிருஷ்ணா ஆகியோருடனும் நீங்கள் அமர்ந்திருந்து நெல்லை வசந்தத்தை அள்ளி அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தீர்கள். மேடையில் அன்பின் ஒளி பரவி இருந்தது.
விருது வழங்கிய வைபவம் அழகாய் நடந்து முடிந்ததும், மேடையிலிருந்த பரவசத்தின் வசந்தம் பார்வையாளரிடம் பரவி, அமர்ந்தது. அதன் குளிர்ச்சியை உணர்ந்தோம். நீங்கள் உங்களது ஏற்புரைக்கு ஒலிவாங்கி மேடைக்கு அருகில் வருகிறீர்கள். அதற்கு மேலான உங்கள் உயரம் ஒரு மிடுக்கை அளித்ததால், ஒலிவாங்கிப் பெருமிதமாய் நின்றது.
உங்களால் தான் இப்படிக் கவித்துவமாய் ஒரு உரை நிகழ்த்த முடியும் கல்யாண்ஜி! ஒளியாய் தெரியும் ஒவ்வொரு ஒளி இதழ்களையும் ஒவ்வொன்றாய் விரித்தீர்கள் – ஆழியின் ஆழ்ந்த அடர்ந்த கடல் ஒளியை, வேட்கையில் பொங்கிப் பெருகும் பிரகாசத்தை, ஏரி எடுத்துக்காட்டும்-தன் கரையொளியை, மணல் வீட்டின் இதழ் ஒளியை, அட்டகாசமான கைதட்டலுடன் வந்த யுவகிருஷ்ணனின் இணையதளத்தில் ஒல்லொலியை என அனைத்தும் கோடை வெய்யில் எல்லோர்க்குமாய் ஒளிர்வதுபோய் சுஜாதாவின் ஒளியில் அனைவரும்ஒளிர்கின்றோம் என்றீர்கள். ஒளியில் ஒளிர்வன பற்றி உங்களால்தான் ஒளிரச் செய்ய இயலும். அன்று நீங்கள் அளித்த ஒளியை ஏற்றி நாங்களும் ஒளிர்ந்தோம். இன்னமும் ஒளிர்கின்றோம்.
விழாமுடிந்து, விடைபெற்றுப் போகும் பொழுது, என் மகளிடம் அவள் கவிதை குறித்துப் பாராட்டியதில், அவளிடம் சட்டென்று பரவச ஒளிப்பற்றிக் கொண்டது. “உங்கள் கடிதம் அவளுக்கு மிகவும் பிடிக்கும்” என்று உங்களிடம் கூறியவுடன், நீங்கள் பதிலாய் அனுப்பிய சந்தோஷ சிரிப்பொலியில் அவள் ஒளிர்ந்தாள். ஒளிர்ந்து கொண்டிருக்கிறாள்.
அனைத்து ஒளியையும் எங்களிடம் அளித்து விட்டீர்களே! நெல்லைக்கு என்ன பதில் கூறுவீர்கள் வண்ணதாசன்!
என்றென்றும் உங்கள் வாசகி
தி. சுபாஷிணி
 வண்ணதாசன் கடிதங்களில் வாழ்வின் வண்ணங்கள்…தி. சுபாஷிணி

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஒளியிலே தெரிவது

  1. ramji_yahoo சொல்கிறார்:

    பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    பரவசமான அந்த நிகழ்வை பார்க்க தவறி விட்டேனேனே.
    (என் மகளிடம் அவள் கவிதை குறித்துப் பாராட்டியதில்)
    காணோளி, புகைப்படம் எடுத்து இருந்தால் பகிரவும் தயவு செய்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s