காலத்தால் அழியாத கல்யாண்ஜி கவிதைகள்

 
கல்யாண்ஜி
இடப்பெயர்ச்சி
 
கருப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.
 0
அபிதா
 
நான் பழுத்திருந்த போது
பழங்கடிக்க வராமல்
உளுத்து விட்டதும்
புழுப் பொறுக்க
ஓடி வரும்
மனம் கொத்தி
நீ.
0
 
வாழ்க்கை
 
இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்
செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்
0
 
பூ 
 
முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை
0
 
தோற்றம்
வாழ்க்கை சிக்கலானது
அல்லது சிக்கலானது போல் தோன்றுவது,
சுலபமானது
அல்லது சுலபமானது போல் தோன்றுவது.
 
நான் உண்மையானவன்.
அல்லது உண்மையானவன் போலத்
தோன்றுபவன்.
என் கவிதை பாசாங்கற்றது
அல்லது போலத் தோன்றுவது.
 
இது இது
அல்லது
இது போலத் தோன்றுவது.
 0
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to காலத்தால் அழியாத கல்யாண்ஜி கவிதைகள்

 1. nilaraseegan சொல்கிறார்:

  அற்புதம்.

 2. Manikandan Sekar சொல்கிறார்:

  காலத்தை விஞ்சி நிற்கும் படைப்புகள்!

 3. aditi சொல்கிறார்:

  miga arumai

 4. Pravin சொல்கிறார்:

  Really Fantastic !! 🙂

 5. kuyalavan சொல்கிறார்:

  miga miga arumai

 6. murugapandian சொல்கிறார்:

  இடப்பெயர்ச்சி கவிதை அருமை

 7. sujay raghu சொல்கிறார்:

  லயித்தேன்! ரசித்தேன் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s