கல்யாண்ஜி கவிதை வரிகள்

வண்ணதாசன்
 
நான் நான்குவரி
எழுதியிருக்கிறேன்
நான்கும் சிம்மாசனக்
கால்கள், இறங்குவதற்கில்லை
 
நான் ஒன்றரை வரிதான்
ஆனாலும் சிகரமானது 
சமவெளி எழுத்துடன்
முகம்கொடுக்க முடியாது.
 
கொடிபிடிக்கும் வரிகள்
கொஞ்சம் என்னிடம் உண்டு.
வர்க்க எதிரிகளை முறியடிப்போம்     
வசமாய்ச் சிக்கினால் வென்றெடுப்போம்.
 
காற்புள்ளி, அரைப்புள்ளி
மட்டுமே நான்வைக்கிறேன்.
புரிய முடிந்தவர்களுக்கு
புரிவதே என் இலக்கியபுரி
மற்றவை அனைத்தும் வைக்கோல் பிரி.
 
சிம்மாசனமும் சிகரமும்
கொடியும் புரியும்
நான்நான் என்று       
அடித்துக்கொள்ள
இயங்கிக்கொண்டே
இருக்கும் வாழ்க்கையில்-
மனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்
உன்னதம் அழைக்கும் எங்கோ தொலைவினில்.
 
 
 
தட்டச்சு :சித்திரவீதிக்காரன்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , . Bookmark the permalink.

4 Responses to கல்யாண்ஜி கவிதை வரிகள்

  1. shanmugam சொல்கிறார்:

    simmasanathkku sigaram kodi

  2. daniel சொல்கிறார்:

    எத்தனை யுகங்களாயும் நான்கின் நான்கள்தான் மோகித்துக்கிடக்கிறது சமூகம், மனிதம் கழிக்கப்பட்ட கனியாய் கிடக்கிறது. ஆனாலும் கண்ணுக்குத்தெரியாத அதன்விதை பூமியில் புதைந்து முளைத்து நிச்சயம் விருட்சமாகும்,

  3. Elango சொல்கிறார்:

    அற்புதம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s