Monthly Archives: ஓகஸ்ட் 2011

காற்றின் கையெழுத்து

This gallery contains 2 photos.

  தானாய் முளைத்த  செடி என்கிறார்கள் யாரோ வீசிய விதையிலிருந்துதானே………..(வண்ணதாசன் )   பழனிபாரதி   குங்குமம் 5-9-2011 இதழிலிருந்து எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணதாசன் முன்னுரைகள்-மனுஷா மனுஷா

This gallery contains 6 photos.

எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,  எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?   அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,  முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,  எத்தனை ஊர்,  எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?  நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது?   வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெரிந்தது

This gallery contains 2 photos.

எங்கே பறவைகள் அடையும்படி இன்னும் குளங்களின் நடுவில் குத்துச் செடிகள் உள்ளதோ, எங்கே தோண்டினால் தண்ணீர் வருகிறதோ, எங்கே பெண் பிள்ளைகள் கூடி விளையாடுகின்றார்களோ,   அங்கிருந்தெல்லாம் நாம் கவிதைகளை மொழிபெயர்த்து நமக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வோம்.          கல்யாண்ஜி நன்றி .ஓவியம் : சிவபாலன்…விகடன்   எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்தோசம்

This gallery contains 5 photos.

ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு சலாகுதீன் ஸார் நாலைந்து அகிரா குரோஸோவா கொடுத்தார் இப்போது கிடைத்திருக்கிற வடிகட்டின தனிமையில் அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில் தெருநாய். அது என்னுடைய இன்றைய மனநிலைக்கு மிகவும் சரியாகப் பொருந்துவதால் அதிலிருந்து. ‘Stray Dog’ நீங்கள் பார்த்திருப்பீர்கள். எல்லா உயர்கலைஞனும் வரைந்து காட்டுவது ஒரு பிரபஞ்ச மனிதனின் அடிப்படைச் சாயல்களையே என்ற … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஞானிக்கு- வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 6 photos.

வண்ணதாசன்  (வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன்.  அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வடிகால்

This gallery contains 9 photos.

மனிதன் என்று இருந்தால், அவ்வப்போதாவது மண்ணில் காலோ கையோ பட வேண்டாமா? வீடும் சரி, வேலை பார்க்கிற இடங்களும் சரி, சாலைகளும் சரி… பாதங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவை அடியோடு நிராகரித்துவிட்டன. மண் வாசனை மாதிரி வியர்வை வாசனையையும் ஒழித்துக்கட்டிவிடுவார்கள்போல… வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நசுங்கிப் போனவை

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி http://www.vikatan.com/article.php?aid=9224&sid=255&mid=1 ‘நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது. என் நினைவில்    காடுகள் இருக்கின்றன!’ – என்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று முடிகிறது. நிறையப் பேர் நினைவில் காடுகள் இல்லை. தாவரங்கள் அற்ற ஒரு விநோதச் சூன்யத்தில் மூச்சுக் காற்று ஊளையிட்டுத் திரிகிறது. தொட்டுப் பேசுவதற்கு ஆள் இல்லை, விரல்கள் வெற்றுவெளியைத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

போய்க் கொண்டிருப்பவள்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் கன்னங்கரேல் என்று சிறு சிறு குமிழ்களுடன் அசைவே அற்றுப் பல வருடங்களாகக் கிடப்பது போன்று தோன்றுகிற அந்தச் சாக்கடையைத் தொடர்ந்து போனாவே ஜ்உடி வீடு வந்து விடும். மூன்றாவது தடவையோ, நான்காவது தடவையோ இந்த ஊருக்கு வருகிற சமயம் வந்து எட்டிப் பார்க்கிற எனக்கே எப்படியோ அருவருப்பாக இருக்க, அதென்னவோ ஒரு காம்பவுண்ட் சுவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்

This gallery contains 1 photo.

65 முடிந்து 66 துவங்குகிறது. ஆமாம், இப்போதுதான் துவங்கியது போலவும், அல்லது துவங்குவது போலவும் இருக்கிறது. ஏப்ரல்.62 புதுமைக்கும் ஆகஸ்ட்.11 விகடனுக்கும் இடையில் இருக்கிறது வாழ்வின் தீராத பக்கங்கள். நன்றியும் மகிழ்ச்சியும்   ……………………..கல்யாணி.சி

More Galleries | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வேரிலிருந்து

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி   அம்மா  அம்மாவுக்கு அம்மா அம்மாவுக்கு அம்மாவுக்கு அம்மா  குனிந்து குனிந்து போட்ட  அதே கோலம் தான். போடுகிற முற்றம் மட்டும்  பொழுதுக்குத் தக்க மாறுகிறது. வாடகைக்கு இருந்தாலும்  வாசல் நம்முடையது தான்.    மனதுக்கு ஏற்றபடி  மாக்கோலம் சுருங்கும். வந்துவிட்டது கோலப்பொடியிலும்    கலப்படம்.                   பெருக்கித் தள்ளும்  வாரியல் நுனியில்  நேற்றையக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கசப்பாக ஒரு வாசனை

This gallery contains 1 photo.

வண்ணதாசன் பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச் சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது. என்னைப் பார்த்ததில் இருந்து பாலாவின் வாய் ஓயவே இல்லை. சித்தி, சித்தி என்று எதையாவது சொல்லிக்கொண்டிருந்தான். பழைய புத்தகக் கடையில் ஒன்றரை ரூபாய்க்கு வாங்கிய கபில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சின்னுமுதல் சின்னுவரை……7 .1 முடிவு

This gallery contains 6 photos.

இனிப்போ, கசப்போ எதிர்கொள்ளுங்கள். கசப்பைப் போல் ருசியில்லை. காலம் போல் அமுதில்லை. விழுங்குங்கள். செரித்துக்கொள்ள முடிந்ததெனில் செய்யுங்கள். விழுங்கவும் முடியவில்லை, அப்போதும் தோன்றவில்லை எனில் நீலகண்டனாக நிறுத்துங்கள். மனிதர்களைச் சம்பாதிப்பதற்காக, முதலில் ஒடுங்கள். சம்பாதிப்பதற்காக அப்புறம் ஒடுங்கள். ஒன்றோடு ஒன்று சம்பந்தப்படுகின்ற புள்ளிமான் சூட்சுமம் பிடிபடுகிறபோது, நீங்கள் வெற்றிபெற ஆரம்பிக்கிறீர்கள். வண்ணதாசன் முன் பகுதிகள்: சின்னுமுதல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இப்படித்தான் இருக்கிறது எல்லாமும்

This gallery contains 1 photo.

வாழ்வுதான் நகர்மயம் ஆகும் எனில், கவிதைகளும் ஆகிவிடுமா. இனிமேல் வேப்பம் பழம் பற்றி எழுதுவதற்குத் தடையும், பான்பராக் பற்றி எழுதுவதற்கு மட்டுமே அனுமதி உண்டா. எதற்குமே அனுமதி உள்ள சர்வசுதந்திர நிகழ்காலம் அல்லவா இது கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

‘தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்` கல்யாண்ஜி முன்னுரை

This gallery contains 1 photo.

கல்யாண்ஜி http://www.natpu.in/ அநேகமாக எழுபதுகளில் எண்பதுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மூத்த கவிஞர்கள் தங்கள்  பட்டறைகளை மூடிவிட்டார்கள். சிலர் எப்போதாவது பேனா மூடியைத் திறந்து எழுதி தங்களது கையெழுத்துக்களைச் சோதித்துக் கொள்கிறார்கள். விடாப்பிடியாக எழுதுகிற ஒன்றிரண்டுபேரும் இல்லாமல் இல்லை. நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஏக்கக் கடல்

This gallery contains 7 photos.

  எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,  எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?  அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,  முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,  எத்தனை ஊர்,  எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?  நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது  நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,  … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பாவைக் கொன்றவன்

This gallery contains 8 photos.

  ஒரு பறவையின் உடலைத் தாங்கும் படி நீண்ட கால்களையும், புயல் கூடப் புரட்டித் தள்ளிவிட முடியாதபடி ஒரு பெரும் பாறைக்கு அண்டை கொடுத்தபடி ஒரு சிறுகல்லையும், ஆறிவிடும்படி நம் காயங்களையும் தந்து, இயற்கை அனைத்தையும் சமன் செய்து கொண்டே இருக்கிறது. வெயிலும் மழையும், ஒளியும் நிழலும், வெளிச்சமும் இருட்டும் என்று எப்படிச் சொன்னாலும் இரண்டையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயமோகன் சிறந்த நவீன கவிதைகளாக கருதுபவை

கல்யாண்ஜி இப்போதாவது நீரில் மூழ்கின சிறுவனுடையதும் தீயில் கருகிய இப்பெண்ணுடையதும் சாவின் வேறுவேறுகள். ஒன்றே போல இடுப்பிலிருந்து சற்றே தூக்கி மடங்கிய கைகளும் பாதாளக் கரண்டி போல விரல்களும் எதையோ பற்றிக் கொள்ளத் தேடியதாக. ஒரு புண்ணியமும் இல்லை எனினும் அந்த உள்ளங்கைகளை இப்போதாவது என இறுகக் கோர்த்துக் கொண்டேன் சற்று. இப்படித் தான் நடந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மனங்கவர் முன்னுரைகள் …வண்ணதாசன்

This gallery contains 1 photo.

    எங்கே கலையும் வாழ்வும் மரபும் இன்னும் செழித்துக் கிடக்கிறதோ,  எங்கே இன்னும் மனிதன் ஆழமாகவும் அகலமாகவும் அறிந்து கொண்டிருக்கிறானோ, எங்கே வெயிலில் பாறைகள் பிளந்து வெடிக்கப் போவது போல் விம்மிக் கொண்டிருக்கிறதோ, எங்கே மகுடிகள் ஊதப் படுகிறதோ,   எங்கே இன்னும் ஆலம் விழுதுகள் அசைந்து கொண்டிருக்கிறதோ, எந்தப் பயணத்தில் சக பயணிகளுடன் கலந்துரையாடிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்