மனங்கவர் முன்னுரைகள் …வண்ணதாசன்

 
 
எங்கே கலையும் வாழ்வும் மரபும் இன்னும் செழித்துக் கிடக்கிறதோ, 
எங்கே இன்னும் மனிதன் ஆழமாகவும் அகலமாகவும் அறிந்து கொண்டிருக்கிறானோ,
எங்கே வெயிலில் பாறைகள் பிளந்து வெடிக்கப் போவது போல் விம்மிக் கொண்டிருக்கிறதோ,
எங்கே மகுடிகள் ஊதப் படுகிறதோ, 
 எங்கே இன்னும் ஆலம் விழுதுகள் அசைந்து கொண்டிருக்கிறதோ,
எந்தப் பயணத்தில் சக பயணிகளுடன் கலந்துரையாடிச் செல்கிறார்களோ,
எந்த மலையில் தீ எரிகிறதோ, 
எந்த ஊர்ச் செம்மண்ணில் மழை பெய்ததும் துளை துளையாக மண் புழுக்கள் வெளிவருகின்றனவோ,
எங்கே பறவைகள் அடையும்படி இன்னும் குளங்களின் நடுவில் குத்துச் செடிகள் உள்ளதோ,
எங்கே தோண்டினால் தண்ணீர் வருகிறதோ,
எங்கே பெண் பிள்ளைகள் கூடி விளையாடுகின்றார்களோ,
 எங்கே குரவை சத்தம் போடுகிற தாய்மார்களுக்கு மத்தியில் புதிய குழந்தை பிறக்கிறதோ அங்கிருந்தெல்லாம் நாம் கவிதைகளை மொழிபெயர்த்து நமக்கு மத்தியில் பகிர்ந்து கொள்வோம்.
         
 வாழ்வு தானே கவிதை. வாழ்வு தானே கலை. வாழ்வு தானே எல்லாம்!
          
சிக்கல்களையும் பின்னங்களையும் கரையான் புற்றுக்களையும் நண்டு அரிக்கிற வாழ்வின் நுரையீரல்களையும் மொழியின் தென்னங்கீற்றுக் குறுத்தோலைகளால் மூடி விடுவதல்ல நோக்கம்.
ஏற்கனவே இருக்கிற பாசாங்குக்குப் பதிலாக மற்றொரு பாசாங்கில் போயே அப்படிச் செய்வதும் முடியும். ஆனால் அந்தச் சிக்கல்களின் நுட்பமான சதவீதங்களை ஒரு கவிஞன் அறிந்தவனாக இருக்க வேண்டாமா?
 
ஒரு பறவையின் உடலைத் தாங்கும் படி நீண்ட கால்களையும், 
புயல் கூடப் புரட்டித் தள்ளிவிட முடியாதபடி ஒரு பெரும் பாறைக்கு அண்டை கொடுத்தபடி ஒரு சிறுகல்லையும், 
ஆறிவிடும்படி நம் காயங்களையும் தந்து,
இயற்கை அனைத்தையும் சமன் செய்து கொண்டே இருக்கிறது.
 
கவிதையும் அப்படிச் சமன் செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
  
வெயிலும் மழையும், ஒளியும் நிழலும், வெளிச்சமும் இருட்டும் என்று எப்படிச் சொன்னாலும் இரண்டையும் சேர்த்துத் தானே மொழியின் தினங்கள்.
இன்னும் தீதான் தெய்வம்,
நீர்தான் வழ்வு.         
 
எல்லோர் வாழ்வும் ஒரே மாதிரியிருப்பினும்,
எல்லோரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்?
 
அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,
முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்,
எத்தனை ஊர்,
எத்தனை மண் கட்டப்பட்டிருக்கிறது?
        
நாம் ஏன் அவரவர் வாழ்வை எழுதக் கூடாது?
நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல்,
மொழி அறியாமல்,
எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்?
 
துருப்பிடித்த திரிசூலங்களில் குத்தப்பட்டிருக்கிற காய்ந்த எலுமிச்சைகளை நானறிந்தவன் எனில்,
என் உடுக்குகளையும் பம்பைகளையும் ஓரத்தில் வைத்து விட்டு,
ஏன் சலவைக்கல் தியான மண்டபங்களின் ‘நீல ஓம்’களை
நெற்றிக்கு மத்தியில் நிறுத்த அல்லாட வேண்டும்?” 
(வண்ணதாசன்)
முழு கட்டுரையையும் படிக்க:  நிலாமகள்………..பறத்தல்- பறத்தல் நிமித்தம்
 

http://nilaamagal.blogspot.com/2011/07/blog-post_24.html

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் முன்னுரைகள், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to மனங்கவர் முன்னுரைகள் …வண்ணதாசன்

 1. nilaamaghal சொல்கிறார்:

  ம‌கிழ்வும், ந‌ன்றியும்…!!

 2. Kanna சொல்கிறார்:

  Very nice

 3. kumky சொல்கிறார்:

  சொல்லி தீர்வதில்லை வாழ்வும், அதன் அனுபவங்களும். ஒரு வாழ்வு முழுக்க வாழ்ந்து தீர்ப்பதைக்காட்டிலும் வலுவாக தாக்குகிறது என் ஆசானின் வார்த்தைகள்.
  எவ்வளவோ சொல்லலாமென்றும், ஒன்றும் சொல்லத்தோன்றாமலும் இருக்கத்தோன்றுகிறது…ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும்.

  ஒரே ஒரு எழுத்தைக்கூட வீணாக்காத, இந்த மயிலிறகு எப்போதும் வருடிக்கொண்டிருக்கிறது மனிதர்களை . இடையறாத வாழ்வின் போக்குகளுக்கிடையே சிறிது ஆசுவாசப்படுத்தி மனிதம் உணர்கிறோம் உங்களிடம் மட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s