‘தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்` கல்யாண்ஜி முன்னுரை

கல்யாண்ஜி
http://www.natpu.in/
அநேகமாக எழுபதுகளில் எண்பதுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த மூத்த கவிஞர்கள் தங்கள்  பட்டறைகளை மூடிவிட்டார்கள். சிலர் எப்போதாவது பேனா மூடியைத் திறந்து எழுதி தங்களது கையெழுத்துக்களைச் சோதித்துக் கொள்கிறார்கள். விடாப்பிடியாக எழுதுகிற ஒன்றிரண்டுபேரும் இல்லாமல் இல்லை.
நான்கு சுவர்களுமே சொந்தமில்லாத அடுக்ககத் தள வீடுகளின் வாசல்களில் ஒரு பாம்புப் பிடாரனோ, மல்லிகைப் பூக்காரியோ, தராசும் அரிவாள்மனையுமாக ஒரு மீன்வியாபாரியோ, குடுகுடுப்பைக்காரன் அல்லது வழிதவறிய குடிகாரனோ எப்படி வர முடியாதோ அதே போலத்தான் கவிதைகளும் வரமுடியாத ஒருவிதமான வாழ்வில் நாம் இருக்கிறோம். போராட்டங்களோ, கொண்டாட்டங்களோ, இடிபாடுகளோ, புனர் அமைப்புகளோ அற்ற, அலுப்பூட்டுகிற தினசரிகளே உள்ள, நிரம்பிய ஒரு வாழ்வின் மத்தியிலிருந்து எத்தனை ஜன்னலைத் திறந்து வைத்தாலும் எந்தக் கவிதையின் வெளிச்சம் வந்துவிடப் போகிறது. படிக்கிற அயல் புத்தகங்கள், பார்க்கிற அயல் திரைப்படங்கள், கேட்கிற மாற்று இசைவடிவங்கள், மதுச்சாலைகளில் தீவிரமடைகிற ஒன்றிரண்டு அதீத உணர்வுகள் இவைகளின் கலவையில் சில சமயங்களில் சில கவிதைகள் வடிவமைக்கப்படுகின்றன
ஒரு பழைய தோல்பாவைக் கூத்து போல, அல்லது பொம்மலாட்டம் போல, விரல்களில் சூத்திரக் கயிறுகளுடன் ஒரு இதிகாசத்தையே கண்முன் நிறுத்துகிறவர்களைக் கவிஞர்களாக இந்த வாழ்வு தந்து கொண்டு இருக்கிறதா. ஒரு மனிதனிடமிருந்து, ஒரு மிருகத்திடமிருந்து, சில தாவரங்களிடமிருந்து, இந்த மண்ணிலிருந்து இதுவரை நம்முடன் நடந்துகொண்டிருந்த உரையாடல்கள் இப்போது மிச்சமிருக்கின்றனவா. பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து, இந்த வாழ்க்கையை மழையை எல்லாம் எவ்வளவுதான் நொந்துகொண்டபோதும், செவ்வாய்க்கிழமை பெரியாஸ்பத்திரியில் மாத்திரை வாங்கிவிட்டு, பேரப்பிள்ளைகளுக்குக் கருப்பட்டி மிட்டாசியும் வாங்கிக்கொண்டு, கடைவாயில் எச்சில் நுரைக்கச் சிரிக்கிற கிழவனின் சிரிப்பிலிருந்து பெற்றிருக்கிற வரிகளின் அடையாளம் நம்மிடம் எஞ்சியிருக்கிறதா. வாழ்வுதான் நகர்மயம் ஆகும் எனில், கவிதைகளும் ஆகிவிடுமா. இனிமேல் வேப்பம் பழம் பற்றி எழுதுவதற்குத் தடையும், பான்பராக் பற்றி எழுதுவதற்கு மட்டுமே அனுமதி உண்டா. எதற்குமே அனுமதி உள்ள சர்வசுதந்திர நிகழ்காலம் அல்லவா இது

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ‘தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்` கல்யாண்ஜி முன்னுரை

 1. ஜெகதீஷ் குமார் சொல்கிறார்:

  என்ன அற்புதமான முன்னுரை! இதுவே ஒரு கவிதை போல இருக்கிறதே!

  சமீபமாய் எழுதப்படும் எந்தக் கவிதைக்குள்ளும் என்னால் நுழையவே முடியவில்லை. ஞானக்கூத்தன், கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், தேவதேவன் போன்ற கவிஞர்களை இனிக் காணவே முடியாதா?

  • ganesakumaran சொல்கிறார்:

   எல்லா துக்கத்தையும் போக்கிவிடும் மாலை மழைக்கு ஒதுங்கும் மனம்
   வரமாய் வாய்க்கப்பெற்றவர்கள் இத்தலைமுறையினர்…கவிதை சில கணங்
   கலில் பிறந்து இறந்து விடுகிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s