மீண்டும் அதன் அதன் பற்றி

 கல்யாண்ஜி
 
வாடா மல்லிப்பூ மாலைக்கு   
வசீகரமில்லை.
தனிப் பூவுக்கோ
 தாங்க முடியாத அழகு.
மண்புழுக்களை நேசிக்கிற
 மனம்
இன்றும் இருக்கிறது.
அதன் அதன் காரியங்களை
 அது அது
அவரவர், காரியங்களை
அவரவர்
ஒப்பிட ஒன்றுமில்லை
 ஒரு கூழாங்கல்லை
 இன்னொரு கூழாங்கல்லுடன்
 ஒரு குன்னி முத்துப்போல்
 பிறிதொன்றில்லை.
தருவித்து விடாது
 ஒரு வேப்பங்கன்றின் காற்றை
இன்னொன்று
இன்றையச் சூரியன்
 நேற்றையச் சூரியன் அல்லன்.
எதன் எதன் நீட்சியாகவோ   
எல்லாம்.
அடிக்கணு இனிப்பு
 அகப்பட வில்லை
 நுனிக் கணுவுக்கு.
ஆரக்கால்களை நொந்துகொள்ளக்
கடையாணிக்குத் துப்பில்லை.
எல்லாம்
உருண்டு உருண்டு
 நடந்து நடந்து
 கடந்து கடந்து.
 ……….
எஸ் ஐ சுல்தான்
 

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

மீண்டும் அதன் அதன் பற்றி க்கு 2 பதில்கள்

  1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

    தருவித்து விடாது

    ஒரு வேப்பங்கன்றின் காற்றை

    இன்னொன்று

  2. அப்துல்லாஹ் சொல்கிறார்:

    ஆம் ஐயா உண்மை தான்.. உங்களின் ஒவ்வொரு வார்த்தைப் படிமமும் சொல்லுவதும் சாற்றுவதும்……. நிகழ்ந்த, நிகழும் யதார்த்தம் பற்றித்தான். சத்தியங்களான இவை யாவும் நமக்கு சாத்தியப்படுவதரற்க்கு புத்திக்குள் புகுவதற்கு ஒரு வாழ்க்கை முழுவதும் வாழ்தல் வேண்டி உள்ளதய்யா…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s