ஒரு ராகத்தின் மேல்…

கல்யாண்ஜி
எனக்கு சங்கீதம் தெரியாது.
பூசினாற்போன்ற நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது.
வயலினின் நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித்தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது
வயலின் நரம்புகளில்
மேல்நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய் குவித்து ஊதத் தயக்கம்.
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக் கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஒரு ராகத்தின்
மேல் தானே.
……….. ………..
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , . Bookmark the permalink.

ஒரு ராகத்தின் மேல்… க்கு 2 பதில்கள்

  1. sankar சொல்கிறார்:

    மிக அருமை.
    எறும்பூற கல்லும் தேயுமாமே.
    எறும்பு ஊற கம்பி ஏன் இசைக்காது.
    அந்த இசையின் வழ வழப்பில் வழுக்கிய
    அவ்வெறும்பு கம்பியில் நடனமாட
    வயலின் இசை எழுப்ப ஆகா
    வானோரும் கீழிறங்க
    வானத்து ரம்பையும் ஊர்வசியும்
    எறும்பைஏற்றி நோக்க
    ராகத்தோடு தளம் சேர –
    என முத்தாய்ப்பு இன்னும் கொஞ்சம்
    ஏக்கம் எனக்கும் காண – இவ்வரிகள்
    அருமை சேர்த்திருக்குமோ நண்பரே?

  2. Karthi சொல்கிறார்:

    Kalyani uncle. ungala naan seekirame santhika poren..🙂 romba santhoshama iruku🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s