பின் நிகழவிருப்பவை

இந்தப் புகைப்படத்தில்
இடது புறமிருந்து நாலாவதாக நிற்கிறேன்.
நான் அடிக்கடி விருப்பத்துடன் அணியும்
கட்டமிட்ட சட்டை
என்னை உங்களுக்கு நினைவூட்டும்.
இந்தக் கவிதைத் தொகுப்பைப்
பெற்றுக்கொண்டவர் கலந்துகொள்ளும்
கூட்டமுண்டு எதிர்வரும் சனிக்கிழமை.
நீங்களும் அழைக்கப் பட்டிருக்கலாம்.
வெளியிட்ட அந்தப் பெண் தான் இப்போது இல்லை.
முகத்துச் சிரிப்பில் தற்கொலைக்குறிப்பின்
முன்னடையாளம் எதுவும் காணோம்.
சமீப காலக் கண்ணாடியோ
பின் கழுத்தளவுக்குக் குறைக்கப்பட்ட கூந்தலோ
எந்த துக்கத்தையும் முணுமுணுக்கவில்லை.
புத்தகத்தை நேர்த்தியாக் ஏந்தியிருக்கும் அவரின்
இருகைகளில் ஒன்றில் மட்டும் சரிந்திருக்கும்
ஒற்றை வளையல் இருக்கிறது
மற்றெல்லோரின் ஒற்றை வளையல் போலவே
எந்த மரண உச்சரிப்பும் அற்று.
ஒரு மிகச் சமீபத்திய புகைப்படத்தில்
நமக்கு மத்தியில் இருந்து உருவியெடுக்கப்பட்ட ஒருவரை
மரணத்தின் சிறு இடைவெளிக்குப் பின்
அச்சடிக்கப்பட்டவராக
இன்னொரு புகைப்படத்தில் பார்ப்பது துயரமானது.
அவர் முன் நீல லேபிள் ஒட்டிய
ஒரு சிறிய தண்ணீர் பாட்டில் இருக்கிறது
திறக்கப் படாமல் துல்லியமான தண்ணீருடன்.
இரண்டு மிடறு அவர் அருந்தியிருக்கலாம்,
பின் நிகழவிருந்த அனைத்தையும் விழுங்கி.
 
………………………………………………………………………………………………கல்யாண்ஜி
 
எஸ் ஐ சுல்தான்
 
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பின் நிகழவிருப்பவை

 1. Ambalavanan Balasubramaniam சொல்கிறார்:

  Can you send the photo referred to in your poem to my e-mail id given below?
  REGARDS,
  B.AMBALAVANAN,
  SALEM.
  bavanan1951@yahoo.in

 2. நெஞ்சை கணக்க செய்யும் கவிதை. அற்புதம்.

 3. nilaamaghal சொல்கிறார்:

  இரண்டு மிடறு அவர் அருந்தியிருக்கலாம்,
  பின் நிகழவிருந்த அனைத்தையும் விழுங்கி.//

  mhmmmm… :-((

 4. N.Rathna Vel சொல்கிறார்:

  மனசு நெகிழ்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s