வண்ணதாசனின் நினைவுகளில் படிந்துள்ள ஞாபகப் படிமங்கள் தாம் அவரது கதைகள். அவரைத் தேடிவந்த முதல் வாசகர் நம்பிராஜனும், அவரது முதல் கதைத் தொகுப்பான ‘கலைக்க முடியாத ஒப்பனைகளை’ வெளியிட்ட சேலம் ‘அஃக்’ பரந்தாமனும் இன்றும் அவரது ஞாபக அடுக்குகளில் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். சிறு வயதில் காது வைத்தியதிற்காக வைத்தியரின் கிளினிக்குப் போகும் வழியில் பார்த்த சிவப்பாக நின்ற ஆளுயர தபால் பெட்டி கூட பின்னும் நினைவில் நின்று எழுத்தில் ஏதோ ஒரு கணத்தில் பதிவாகியிருக்கிறது. இந்த நினைவாற்றல் தான் வண்ணதாசன் பெற்ற வரப்பிரசாதம்…(ஜீவி)




……………………..வண்ணதாசன்
எஸ் ஐ சுல்தான்
Advertisements
Pingback: சமவெளி | வண்ணதாசன் « கடைசி பெஞ்ச்