பறவைக்கும்

 

 
நீண்டு ஒடுங்கிய ஏமாற்றமாக
நகர்ந்து கொண்டிருந்தது ஆறு.
எப்போது தொட்டாலும் குளிர்ந்திருக்கும்
கல் மண்டபத் தூண்கள்
நம்பிக்கையின்மையின் வெப்பத்துடன்
சாயத்துவங்கியிருந்தன.
வெளிச்சம் குறைந்த கோவிலுக்குள்
போக விருப்பமில்லை.
வடிசாராய போதையில்
எக்குத் தப்பான தாண்டவத்தில்
இருக்கலாம் எம்பெருமான்.
மீன் கடிக்கவென
காலம் அகாலமாகச் சேமித்திருந்த
கால் நக அழுக்கை என்ன செய்வது?‘
ஆயுள் பரியந்தம் அனுபோக பாத்தியதை’ உள்ள
ஆற்றங்கரை மணல் வீடுகளை
கனவில் கூட, எதிர் தலைமுறைக்குப்
பத்திரப் பதிவு செய்யமுடியாது இனி.
யாரோ எப்போதோ
நயினார் நோன்புக்குச் சூடிய
கொழுந்து வாசனையின் கூப்பிடுதூரத்தில்
அலைந்துகொண்டிருந்த அருவப் பொழுதில்
இதுவரை கேட்டறியா ஒரு
துயரக் குரல் துடிக்கத் துடிக்க
நீல அமலை மலர் மூடிய
நீருக்கு மேல்  சாண் உயரத்தில்
மீன் கொத்தாது விரைந்து மறைந்தது
ஒரு மீன்கொத்தி.
இருந்திருக்கலாம்
எனக்கு இருக்கும் இறந்த காலம் போல
பறவைக்கும்
ஒரு பறந்த காலம்.
………………………………………………….கல்யாண்ஜி
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to பறவைக்கும்

  1. அப்துல்லாஹ் சொல்கிறார்:

    ஆஹா மிக அழகான வார்த்தைகளின் ஓட்டம்… சில சமயங்களில் நாம் வாசிக்கும் மனசைத்தொடவல்ல படைப்புகள் அவற்றின் தாக்கங்களின் அடிப்படையில் நமக்கு ஆசிரியரின் மனதையும் பிம்பப்படுத்துகிறது…
    அவ்விதம் கலங்கிய சேற்றின் நிறம் உள்வாங்கிய கண்ணாடி ஆற்றுநீர் அதில் கால் நனைக்கப் போகும் நம் மனசையும் கலங்கச் செய்த மாதிரி…
    மறைந்தும் மறையாத பறந்தகாலம் காலம் ஒன்றைத் தன்னில் கொண்ட மீன்கொத்தியாய் இங்கு வாசகன்….

  2. இருந்திருக்கலாம்
    எனக்கு இருக்கும் இறந்த காலம் போல
    பறவைக்கும்
    ஒரு பறந்த காலம். – கல்யாண்ஜி

    வண்ணதாசன் சொல்வது போல இழந்துபோனவைகளை எல்லாம் எப்படி மீட்பது? வையை ஆறாக எப்பொழுதும் பார்க்கவா முடிகிறது?
    அற்புதமான பகிர்வு. நன்றி.

    வைகை ரயிலாகவே ஓடினால் நாளை நாம் குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும்!

    -சித்திரவீதிக்காரன்

  3. nilaamaghal சொல்கிறார்:

    ஆற்றங்கரை மணல் வீடுகளை

    கனவில் கூட, எதிர் தலைமுறைக்குப்

    பத்திரப் பதிவு செய்யமுடியாது இனி.//

    /எனக்கு இருக்கும் இறந்த காலம் போல

    பறவைக்கும்

    ஒரு பறந்த காலம்.//

    நினைத்து நினைத்து பெருமூச்சிடும் கொடுமை கூட‌ வ‌ரும் ச‌ந்த‌திக்கு விட்டு வைக்காத‌ அவ‌ல‌ம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s