இதைப் பற்றி

 
 

எல்லோரும் காதலியைப் பற்றிக்
கவிதையெழுதிவிட்டுக்
காதல் பற்றி எழுதியதாகச் சொல்கிறார்கள்.
இறந்தவரைப் பற்றி எழுதிவிட்டு
மரணம் பற்றி என்கிறார்கள்.
ஒரு பறவையைப் பற்றி எழுதுவது
பறத்தல் பற்றி அல்ல.
சோப்பைப் பற்றி எழுதுவது
அழுக்கைப் பற்றியது ஆகாது.
கல் மண்டபங்கள் பற்றியவை
நதியைப் பற்றியது அல்ல.
குழந்தைகள் பற்றிய வரைதல்
குழந்தைமை பற்றியது எப்படியாகும்?
கள்ளின் லகரியல்ல ஒரு
கள் போத்தலை வர்ணிப்பது.
மனத்தடையற்ற யோனிப் பேச்சு
கலவியின் பரவசம் ஆவதெப்படி?
சிலுவை வேறு, அறையப்பட்டவர் வேறு.
சவப் பெட்டி வேறு, அடங்குதல் வேறு.
பேரீச்சை அல்ல, ஒட்டகம் அல்ல
பாலைவனம்.
கழுதைப் புலி கடித்திழுக்கும்
கடைசி விலாவெலும்புச் சதையல்ல
மிக நீண்ட ஓட்டத்திற்குப் பின்
வீழ்த்தப் பட்ட வரிக்குதிரை.
அவ்வளவு எல்லாம் ஏன்?
எதைப் பற்றியும் எழுதப்படுவது அல்ல
இதைப் பற்றி எழுதுவது என்பது.
………………………………………………………………………………கல்யாண்ஜி 

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

இதைப் பற்றி க்கு 3 பதில்கள்

  1. s.raajakumaran சொல்கிறார்:

    அருமை என்ற ஒற்றை வார்த்தையை விடவும் வேறென்ன வார்த்தை இருக்கக் கூடும்,ஒரு நல்ல படைப்பை விமர்சிக்க? அருமை! ……………………………………………….. நேசமிகு ராஜகுமாரன்

  2. ramjiyahoo சொல்கிறார்:

    அருமை

  3. vallamthamil சொல்கிறார்:

    என்னைச் சுற்றி எல்லாமிருக்கிறது
    எல்லாவற்றுகுள்ளும்
    எனக்குகந்த நான் இருப்பதையே காண்கிறேன்…

    உண்மையில்
    எல்லாமென்பது இல்லை..
    இல்லைகளுக்குள்ளும்
    இருக்கும் என்னை
    தேடியலையும் தேடுதலின்
    மூச்சு வாங்குதலே
    எல்லாமுமாக இருக்கிறது…

    விரித்துவைத்த வெள்ளைதாளின் மீது
    காற்றினால் அசைகிறது பேனா..
    பின்
    என் கையிலும் அசைகிறது-கற்பனையினால்…

    காற்றினால் அசையும் அசைவை
    ஏதாவதொரு கணத்தில்
    என் கையிலும் கொண்டுவர முடிந்ததெனில்….
    அற்புதம்…அற்புதம்…
    நானும் காற்றும் கலந்தே எழுவோம்..
    பாய்வோம்….

    எழுத்துகளும், வரிகளுமற்ற
    எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளது
    உண்மையான கவிதை…
    அதை
    வரிகளாலும் வார்த்தைகளாலும்
    வருடி வருடி
    அடையாளப்படுத்த விழையும்
    அற்ப முயற்சிகளே
    இதுவரை வெளிவந்த அனைத்து கவிதைகளும்..
    இது உட்பட…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s