இந்த அர்ச்சனாவுக்கு முந்திய அர்ச்சனா

 
சென்ற விடுமுறைக்கு வந்திருந்த போதே
என்னிடம் அர்ச்சனா
விண்ணப்பம் செய்திருந்தாள்.
பக்கத்து வீட்டு ஷெர்லி அப்பா மாதிரி
நான் காதல் பறவைகளும்
புறாக்களும் வளர்க்க வேண்டும்.
அனந்த சங்கர் மாமா போல
தொட்டி மீனகள் அவசியம்.
புதுப் புது பூச்செடி எல்லாம்
பின் வீட்டு ஜோஸ் மாதிரி.
முடிந்தால் ஒரு சடைநாய்க் குட்டி
அவளே கொண்டுவந்துவிடுவாள்.
இந்த விடுமுறைக்கு வந்து
இரண்டு நாட்களாகியும்
எதையுமே கேட்கவில்லை இதுவரை.
வந்ததில் இருந்து
வரைந்துகொண்டே இருக்கிறாள்.
பதிவிறக்கம் செய்து தொடர்ந்து
பாடல்கள் கேட்கிறாள்.
கார்ட்டூன் அலைவரிசைகளில்
காணாமல் போய்விடுகிறாள்.
எனக்குப் பதற்றமாக இருக்கிறது.
வெறும் இரண்டு கோடைகளுக்கு இடையில்
எங்கே திசைமாறியிருக்கும் அவளுடைய
காதல் பறவைகளும் தொட்டி மீனகளும்
பூச் செடிகளும் என்று.
அவற்றை விடவும் தொலைந்து போனது
இந்த அர்ச்சனாவுக்கு முந்திய அர்ச்சனா என்பதை
எப்படிச் சொல்ல அவளிடம்?
………………………………………………………………………….கல்யாண்ஜி
எஸ் ஐ சுல்தான்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to இந்த அர்ச்சனாவுக்கு முந்திய அர்ச்சனா

  1. Pena Manoharan சொல்கிறார்:

    அன்புள்ள கல்யாண்ஜி/வண்ணதாசன் எழுபதுகளில் இலங்கையில் இருக்கும்போதே வானம்பாடி வாசிப்பின் கிறக்கத்தில் கவியெழுத வந்தேன்.தாய்த்தமிழகம் புலம் பெயர்ந்த்போது நான் காவல்துறையில் பணிபுரிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால் தங்களையெல்லாம் தவற விட்டேன்.2008இல் காக்கிச்சட்டையை விட்டு விடுதலையானேன்.2009இல் என்னுடைய கவிதைத்தொகுதி”கற்றறிந்த காக்கைகள்” நியு செஞ்சுரி வெளியீடாக தங்களுடைய தந்தை தி.க.சி.அவர்களின் அணிந்துரையுடன் வெளிவந்திருக்கிறது.அந்தத்தொகுப்பில் இதுபோன்றதொரு அனுபவம் பதிவாகி இருக்கிறது,என்னுடைய பலவீனங்களுடன்.

  2. vallamthamil சொல்கிறார்:

    அந்த ஒளிரும் சிரிப்பில் ஒளிந்துகொண்டுள்ளது காலக்கிறுக்கனிண் கைவேலை,முந்தைய அர்ச்சனாவை மாற்றிய கரங்களின் மாயாஜாலம்

  3. manivel.m சொல்கிறார்:

    manam oru mayak kurankyu
    ariyatha varai manithan kuzhanthai
    arintha udan payappadum manithan

  4. Anand சொல்கிறார்:

    Elimayana ullam thodum nigalvu and varikal

vallamthamil -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி