வீடு

 
முழுதாக இருக்கும்போது
கவனத்தில் விழவில்லை
இடிந்து கிடக்கும்போது
இம்சை படுத்துகிறது
யாருடையதாகவோ
இருந்த வீடு
…………………………………………………………………………….கல்யாண்ஜி

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to வீடு

 1. நாங்கள் முன்பு குடியிருந்த ஓட்டுவீடும் இப்படித்தான் இடிந்து கிடக்கிறது. இன்று பார்க்கும் போது கூட பழைய நினைவுகள் வந்து வலியை ஏற்படுத்துகிறது. அற்புதமான கவிதை. நன்றி.

 2. s.raajakumaran சொல்கிறார்:

  வீடு வெறும் செங்கற்களால் கட்டப்பட்டதல்ல.
  முந்தைய தலைமுறையின் மூச்சுக்காற்றால்.
  லட்சக்கணக்கான உணர்வுக் கலவையினால்.
  எண்ணிலடங்காத பெருமூச்சுகளால்.
  கோடிமுறை நடந்தடங்கித் தேய்ந்து போன
  காலடிச்சுவடுகளால்..

  எத்தனை முறை வாசித்தாலும்-எழுதினாலும்
  தீராநதிப் பெருக்காக நீண்டுகொண்டே இருக்கிறது
  வீடு பற்றிய சித்திரங்கள்…

  இக்கவிதை எனது தளத்தெரு-அம்மா வீட்டையும்,வயலூரின் அப்பா வீட்டையும்
  சட்டென இழுத்து வந்து எனக்குள் வசிக்கச் செய்கிறது.அதோடு என் நதியோடிய காலம் தொகுப்பிலுள்ள ஒரு சிறுகவிதையையும் ஞாபகமூட்டுகிறது…

  வீட்டை விற்று
  வெகு காலத்திற்குப் பின்னும்
  அந்த வீட்டை
  நம்ம வீடு என்றே
  அழைத்துக் கொண்டிருக்கிறது
  அம்மா…
  -நேசமிகு ராஜகுமாரன்

 3. kumky சொல்கிறார்:

  ஹூம்…
  வீடென்றால் வீடு மட்டுமேவா..

  இப்படியான வாழ்ந்து கெட்ட வீடொன்றில்
  வாழ்ந்திருக்கும்போது பிறந்து வளர்ந்த
  வாழ்வு இன்னமும் தங்கிக்கிடக்கிறது
  கெட்ட பின்னான வீட்டின் வாழ்ந்த நினைவுகள்
  சதா காலமும் உறுத்தியபடி.

 4. Bar-Code (@kaeswar) சொல்கிறார்:

  இதை இப்படியே விடு
  என்று
  சொல்ல யாரால் முடியும் ?
  முடியாமல் போனவர்கள்
  சொல்லாமல் விட்டதை
  நாம் இங்கே சொல்லி
  என்னவாக போகிறது!
  விடு இப்படியே இதை

 5. Pena Manoharan சொல்கிறார்:

  வீடு காலந்தோறும் மனிதனைக் கட்டிப்போடுகிறது அல்லது விடுதலை செய்கிறது.என்னிடமுமுள்ள வீடு பற்றிய சித்திரங்களையும்,மனப்பதிவுகளையும் கிளர்துகிறத் இந்தக்கவிதை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s