போர்த்திக் கொள்ளுதல்

வண்ணதாசன்
கடைசியில் ஒரு மட்டுக்கும் போர்வை வாங்கியாகிவிட்டது. அவன் விரித்துப் படுத்தெழுந்த ஜமுக்காளத்தையோ அல்லது இடுப்பில் இருக்கிற கைலியையோ போர்த்திக் கொண்டு தூங்குவதைக் காலையில் பார்க்கும் போதெல்லாம் ஒரு போர்வை எப்படியாவது இந்த மாதம் வாங்கிவிட வேண்டும் என்று சரசு நினைப்பாள். ராத்திரி படுக்கும்வரை படித்துக் கவிழ்ந்து வைத்த வாரப் பத்திரிகையையும் கண்ணாடியையும் எடுத்து ஜன்னலில் வைத்த கையோடு அவனை எழுப்பி நேரே ஒரு போர்வை வாங்கிக் கொண்டுவரச் சொல்லத் தோன்றும்.

ஆனால் அவனுக்கு இப்படியெல்லாம் உடனுக்குடன் வாங்குகிற குணமில்லை. வாங்க ஓடாது. ஒரு  காரியத்தை உடனே செய்து முடிக்க அவன் பழகியிருக்கவில்லை.

இந்தப் போர்வைகூட கோவாப்ரேடிவ் ஸ்டோரில் பார்த்து சரசுதான் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். சரசுவுக்கு அந்தப் போர்வையை வாங்க முடிந்ததில் ரொம்ப சந்தோஷம் இருந்தது. அவளுக்குக் கல்யாணம் ஆன சமயத்தில் அவள் இரண்டு ஜமுக்காளங்களும் நாலு தலையணை களையும் மாத்திரமே கொண்டுவர முடிந்தது. ஒரு புழுவைப் போலச் சிறுமைப்பட்டுக் கொண்டேதான் அவள் அவனுடன் வாழ்வு நடத்த நுழைந்தாள். அவனுக்குத் தான் அல்லாமல் வேறு யாராவது வசதியான இடத்திலிருந்து வாழ்க்கைப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்று சரசு பல சமயங்களில் நினைக்கிறாள். எதை மிச்சப்படுத்தியாவது அவனுக்குக் கட்டில் வாங்கிக் கொடுக்க அவளுக்கு ஆசை யிருந்தது. அதை அவனுடைய பிரியத்தைத் தாங்க முடியாத ஒரு இரவில் சொன்னபோது சரசுவால் அழத்தான் முடிந்தது.

”நீங்க வேற யாரையாவது கட்டியிருக் கலாம்” என்று திரும்பத் திரும்பச் சொல் வாள். ‘சீச்சீ’ என்று மட்டும் சொல்லி அவளைத் தேற்றுவான். அது ஒப்புக்காகத் தேற்றுவது போல இருக்கும். ‘வேறே யாரையாவது கட்டியிருந்தாலாவது நான் நிம்மதியாக இருந்திருப்பேன்’ என்று அவனே தன்னிடம் ஒருநாள் சொல்லிவிடுவானோ என்ற பயம் ரேவதியைப் பெற்று ஐந்து வருஷத்திற்கு அப்புறம் இந்தப் போர்வையை வாங்கிக் கொண்டு வருகிற வினாடிவரை இருக்கிறது.

”என்னம்மா வாங்கிட்டு வந்திருக்கே? சட்டையா!” என்று வந்ததும் வராததுமாக ரேவதி கேட்டபொழுது சட்டென்று ஒரு கோபம் அதன் மீது வந்தது. சரசுவுக்கு ரேவதிமீது முதலில் ஒரு வினாடி கோபம் தான் எப்பொழுதும் வருகிறது. அப்புறம்தான் பிரியம். ஓர் ஆண் குழந்தைமூலம் தான் கொண்டுவராத எல்லாச் சீதனங்களையும் ஈடுகட்டிவிடலாம் என்று சரசு நினைத்திருந்த வேளையில் அவள் பெண்ணாகவே பிறந்ததனால் ஏற்பட்ட கோபம். கல்யாணத்துக்கு முன்னால் நினைக்கிறதை எல்லாம் சிறிது சிறிதாக முழுமையாக நடத்தி வந்ததுக்கு மாறாக, அவளும் மொத்தமாக ஏமாற்றிவிட்டாள் என்ற கோபம்.

”சட்டை இல்லேம்மா. அப்பாவுக்குப் போர்வை. ராத்திரிப் போர்த்திக்கிடுறதுக்கு” சரசுவின் போர்வைக்குள் அவன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பான். கால் பாதத்தில் கூடக் கொசுக் கடிக்காத அளவுக்கு முழுக்கப் போர்த்திக் கொள்ளலாம். ஜமுக்காளம், கைலி எல்லாம் இனிமேல் அதனதன் வேலைகள் செய்யும். ஆனால் ஒரு போர்வையை அவள் கூடுதலாகத் துவைக்க வேண்டும். தினசரி ரேவதியின் யூனிபாரத்தைச் சாயந்தரம் ஸ்கூலில் இருந்து வந்ததும் கழற்றச் சொல்லித் துவைத்துக் காயப்போட்டு வருகிறபோது போர்வையை ஒரு மாதத்திற்கு ஒருமுறை துவைப்பதில் கஷ்டமில்லை. ஆனால் ஒரு போர்வையை அலசத் தண்ணீர் நிறைய வேண்டும். தண்ணீராவது இறைத்துக் கொள்ளலாம். சோப் நிறையத் தேவைப்படும். காயப்போட்டதும், கொடி முழுக்க நான்தான் என்று தொங்கும். மழைக்காலத்தில் எப்படிக் காயும்?

ரேவதியிடம் போர்வையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே யூனிபாரத்தைக் கழற்றி வேறு கவுன் போடச் சொன்னாள். ரேவதிக்கு யூனிபாரத்தைத் தவிர வேறு கவுன்கள் அதிகம் இல்லை. வேறு கவுன்கள் வாங்கிவிடலாம். போகிற வழியில் டெய்லரிடம் ¦¡ல்ல வேண்டும். அதுவரை வெட்டுத் துணியில் கவுன்கள் தைக்கப் படுகிறதும் விறக்கப்படுகிறதும் வேறு யாருக்கும் தெரிந்து விடாமல் இருக்க வேண்டும். வெட்டுத் துணிகளாலேயே ஒட்டுப் போடப்பட்டுத் தைத்த ஒரு பெரிய போர்வையின் கற்பனையில் புதைந்து அவள் சிரித்துக் கொண்டாள்.

சைக்கிளைத் தார்சாவில் ஓரமாக வைக்கிறதற்கு முன்னாலேயே வீட்டில் நடக்கிற ஒவ்வொன்றையும் பற்றிச் சொல்லி முடித்துவிடுகிற ரேவதி போர்வையைப் பற்றியும் தனக்கு முந்திச் சொல்லிவிடுவாள் என்று நினைத்தாள். சரசுவுக்கு தானே இதைச் சொல்லவேண்டும் போல இருந்தது. வாயால் சொல்லக்கூடாது. அவன் தூங்கிவிட்ட பிறகு போர்த்துவதன் மூலம் சொல்லவேண்டும். காலையில் போர்வையே அவனுக்குச் சொல்லியிருக்கும்.

போர்வையை நெஞ்சுவரை ஏற்றிக் கட்டிச் சாமியார் மாதிரி முடிச்சுப் போட்டுக் கொண்டு ”அம்மா! தாயே!’-

போர்வையை முக்காடிட்டுப் பூச்சாண்டி காட்டி-

‘ஒருநாள் கால்பக்கம் வைத்தது மறுநாள் முகத்துப் பக்கம் வராமல் இருக்கணும்னா அடையாளத்துக்கு முடிச்சுப் போட்டுக் கிடணும் ஒரு மூலையிலே’ சரசு அவனிடம்-

சலவைக்கு எல்லா அழுக்கையும் போர்வையில் வைத்து மூட்டையாகக் கட்டி-

சரசுவின் தம்பி யாரிடமிருந்தோ காமிரா இரவல் வாங்கி வந்து படமெடுக்கும் போது சரசுவுக்கும் ரேவதிக்கும் பின்னால் போர்வை தொங்க-

மனதின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரசு போர்வையை விரித்து விரித்துப் பார்த்தாள். ரேவதி வெறுந்தரையில் படுத்துத் தூங்கியிருந்தாள். அது எப்போதும் இப்படி வெறுந்தரையில்தான் முதலில் தூங்கும். அப்புறம்தான் துணியை விரித்துத் தூக்கிப் போட வேண்டும். தூங்குகிற ரேவதியைத் தூக்கிப் போடுகிற சிரமத்துக்கு சரசு அலுப்பதே இல்லை. ரேவதி தூங்கும்போது அப்படியே அவளுடைய அப்பாவைப் போல ‘ஒருச் சாய்ந்து’ இருப்பாள். சரசுவுக்கும் ரேவதியுடன் அப்படியே படுத்துக் கொள்ளத் தோன்றியது.

ஆனால் படுப்பதற்கு இன்னும் நேரம் இருக்கிறது.

தொடர்ந்து படிக்க……..http://azhiyasudargal.blogspot.com/2010/12/blog-post_28.html

 

 
 
எஸ் ஐ சுல்தான்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s