குறுக்கிட்ட என்னை

அந்தக்காட்சியே சற்று வினோதமாக இருந்தது.
மிகச் சிறிய வீட்டின் பக்கவாட்டு விஸ்தரிப்பாக
செங்கல் கட்டுமானம் ஆகிக்கொண்டிருந்தது.
இடம் பெயர்ந்து எங்கோ காணாமல் போன
பித்தளைச் செம்பொன்று
காலத்தில் சரிந்த நார்க்கட்டில் கீழ் இருந்தது.
மிக உரத்த வசைகளைச் சொல்லி
பாம்படம் அணிந்த முதிய கிழவியை
சீக்கிரம் செத்துப் போகச் சொன்னான்
போதையில் இருந்தவன்.
தென்னோலைச் சிலுவையை ஒரு
காற்றாடியென்று கையில் கொண்டவன்
வெள்ளி அரைஞாண் தவிர
வேறெதையுமே அணியாதிருந்தான்.
ஸ்டாண்ட் போட்டிருந்த டி.வி.எஸ் 50 ல்
காலைச் சுழற்றிப் பெடல் மிதித்தவள்
ஆரஞ்சு கவுன் அணிந்த அக்கா.
வீட்டை விட்டு விலகவும் முடியாமல்
அடுத்தொரு சூலைச் சுமந்தபடியே
தெருவில் நடக்கிற பெண் அவசரமாக
என்னைக் கண்டதும் அழுகையைத் துடைக்கிறார்.
அழுகிற ஒருத்தியை அழவும் விடாமல்
குறுக்கிட்ட என்னை என்ன செய்யலாம்?
……………………………………………………………………வண்ணதாசன்
படம்: விகடன்
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to குறுக்கிட்ட என்னை

 1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  அழுகிற ஒருத்தியை அழவும் விடாமல்

  குறுக்கிட்ட என்னை என்ன செய்யலாம்?

  • R.Raveendran சொல்கிறார்:

   ஒரு நிழல் படமென காட்சி உறைந்து , மனதில் அம்பென தைக்கிறது கடைசி வரி…. கவிதையும் .அவலமும் கலந்த
   அபூர்வ வரி அது..

 2. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  கவிதை உலகில் கல்யாண்ஜியின் இடம் இன்னமும் நிரப்பப் படாமல்
  அவருக்காக இப்போதும் காலியாகவே இருக்கிறது
  என்று தமிச்செல்வன் சொல்வது, உண்மையே

 3. அற்புதமான கவிதை. அதில் வருகிற இறுதி வரிகள் நம்மையும் நெகிழச் செய்து விடுகிறது. ராஜ்குமார் ஸ்தபதியின் பொருத்தமான சித்திரத்தை பயன்படுத்தியது அருமை. பகிர்வுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s