Monthly Archives: நவம்பர் 2011

எந்த நொடியிலும்

This gallery contains 1 photo.

எந்த நொடியிலும் என்னை நீயோ உன்னை நானோ முத்தமிடக் கூடியதாகவே இருந்தது. நிழல்கள் பெருக்கும் அந்தியில் இந்த அறைக்குள் வந்து நாம் அமர்ந்தபோது திரைச் சீலையின் சின்ன நகர்வோ நம்மில் யாரோ ஒருவர் நாற்காலியை நகர்த்திய நறநறப்போ, ரோமன் எண்களில் நிலைகுத்தி நிற்கும் கடிகாரமோ ஏதோ ஒன்றுதான் பொறுப்பேற்கவேண்டும் நம் கையில் இவ்வளவு கூர்மையான ஆயுதங்களைத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

காணாமல் போகும் வாய்கால்கள்

This gallery contains 13 photos.

முன்னறிவிப்புக்களை எல்லாம் தாண்டி மழைபெய்து கொண்டிருக்கிறது. ஐப்பசி கார்த்திகை அடைமழை தவிர, காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் நகர்வுகளால் உண்டாகிற மழை. மூன்று நாட்களின் தொடர் மழைக்குப் பிறகு இன்று தான் ஓயத் துவங்கிறது. எனக்கு ஓய்ந்து போகச் சம்மதமில்லை.………  வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆதி.

This gallery contains 1 photo.

ஈஸ்டர் மறுதினத்தில் புடைத்துத் தொங்கும் இந்த அவுரி விதை நெற்று எண்பது வருடங்களுக்கு முன்பு என் தாத்தாவின் நிலத்தில் மஞ்சட் பூங்கொத்தாக அசைந்திருந்தது, அவற்றின் ஆதி மகரந்தம் ஒட்டிய கால்களுடைய பட்டாம் பூச்சியொன்று இன்னும் சிறிது நேர வெயிலில் பறக்கத் துவங்கிவிடும்நான் பார்க்க இன்று. உயிர்த்தெழும் விதை பாடக் கூடும் ஒரு உன்னதப் பாட்டு. ………………………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

WINDOW

This gallery contains 8 photos.

Vannadasan

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காக்கைமை

This gallery contains 1 photo.

    புங்கை மரத்தடியில் ஒரு காக்கைக் குஞ்சு எறும்பு அரித்துக் கிடந்தது பாவமாய். காது மூக்கு தொண்டை மருத்துவர் கட்டுகிற வீட்டுச் செங்கல் பக்கம் இரட்டைச் சிசுக்களின் மரணம் போல இறந்து இடந்தன மேலும் இரண்டு. அன்றைக்கும் இன்றைக்கும் மருந்துக்குக் கூட எந்தக் காக்கையும் கத்தவே இல்லை. அணிலை விரட்டிச் சோறு கொத்தின. தேங்காய்ச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வண்ணநிலவனுக்கு வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 10 photos.

நீங்களோ, நானோ, இன்னொரன்ன பிறரோ நாம் இப்படி இருப்பது குறித்து துக்கம் கொள்ளத் தேவையில்லை. நாம் இப்படி இருக்குமாறே மற்றவர்கள் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். இந்த — வயதின் புறவுலக அகவுலக ஷீணங்களுக்கு மத்தியிலும் பார்க்கிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நுட்பமான ஒரு இடத்தை எனக்குக் கொடுத்து விடுகிறார்கள். கிட்டத்தட்ட ஒக்கலில் வைக்காத குறைதான் … … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கடலற்ற கணத்தில்

This gallery contains 1 photo.

  கடலைச் சமீபத்தில் கனவில் கூடப் பார்த்ததில்லை. படகின் வெளிப்புறத்தில் படிந்திருந்த அடுக்கடுக்கான ஆயிரம் கால அலைகளை எப்போதோ ஒருமுறை தொட்டிருக்கிறேன். சிகிச்சைக்குள்ளாகும் சினேகிதியின் உலர்ந்த கண்களை ஒருவேளை இறுதிமுறையோ எனப் பார்த்த பதற்றத்தில் வெளியேற, மருத்துவ மனைக்கு எதிர்ச் சிறகில் அசைந்தசைந்து தவிக்கிறது கடலற்ற கணத்தில் ஒரு கட்டு மரம். ……………………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒளியிலே தெரிவது

This gallery contains 1 photo.

  சூரியனைப்பற்றி யோசித்திருப்பேன் போலும் நான் சூரியனல்ல என்றும்- ஒளிப்புழுதி கிளப்பும்- என்றும் ஏதே ஏதோ வார்த்தைகளின் முறிந்த துண்டுகள் மிதந்து சுழன்றன காலையை எடுத்துக் கொடுத்த நினைவின் கைகளில் சற்று மிகச்சற்று நேரத்தில் வார்த்தைகள் களைப்புற்று ஒதுங்க, நிபந்தனயற்ற கடிவாளங்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கனைக்கும், கடைவாயில் சிரிக்கும் குதிரைகள் பாய்ந்துகொண்டிருந்தன திசைகளிலிருந்து இன்னும் திசைகளுக்கு, ஓரோர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கோலம் பார்க்கின்

This gallery contains 1 photo.

  கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே கோலம் போடுகிறாள் அந்தப் பெண். நிபந்தனையற்ற அன்பில் நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. கோலம் பார்க்கின் துக்கம் இல்லை. ……………………………………………………………….கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கூறல்

This gallery contains 7 photos.

‘’வாழ்ந்ததைக் காட்டிலும் வாழவேண்டியது அதிகமிருப்பதாகவும் பெற்றதைவிட இழந்துவிட்டது அனேகம் என்றும் நான் நினைத்ததில்லை. ஆனால் எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பது போலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது’’-வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நானாகவும் யாராகவும்

This gallery contains 4 photos.

‘’ஒரு விதையாகவும் ஒரு தாவரமாகவுமே என்னையும் என் வாழ்க்கையையும் நினைத்துக் கொள்கிற எனக்கு என்னுடைய எழுத்துக்கள் மழைக்காலத்தில் எழுதப்படுவதும் வெளியாகிறதும் பொருத்தமானதென்றே படுகிறது’’ ………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உயிர் வாழ்தல்

This gallery contains 1 photo.

நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குகள் தவறி வாழ்வின் அடுக்குகள் இடம் மாறிவிட்டன   வழியெங்கும் வெவ்வேறு கூர்மையுடன் அடைத்துக் கிடக்கின்றன முட்புதர்கள்   வெளிச்சக் கதிர்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி சிக்கலாகி இருட்டின் பாழில் அமிழ்ந்து கொண்டிருக்கின்றன   விஞ்ஞானம் கவ்வி இழுத்துக் கொண்டு போன சிறுபறவை போல இயற்கையின் சிறகுகள் காற்றில் இழுபட தப்பிக்க முடியாது என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அந்திமம்

This gallery contains 1 photo.

உற்சவங்கள் வந்தும் ஓடாமல்- வடமின்றி, ரதவீதி வலமின்றி,  தகரக் கொட்டகையும் தாளிழந்த தேர்சுமக்கும் சிற்பத்தை- போம் வழியில் நின்று ரசிக்கும் மஞ்சள் வெயில். …………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நவம்பர் 14

This gallery contains 2 photos.

அவரது கருணை அவரது படைப்புகளுக்கு எல்லையற்ற நெகிழ்வைக் கொடுக்கிறது. இலக்கியக் கருத்துத் தளத்தில் அது மனிதாபிமானமாகக் கருதப்படுகிறது. புற உலக யதார்த்தத்தையும் மனிதர்களையும் அவர் இளகிய மனதோடும், இரக்க சிந்தையுடனும் மட்டும் பார்க்கவில்லை. செளந்தர்யக் கண் கொண்டும் பார்க்கிறார். இந்த மாயக் கலவை அவரது பேனாவின் வழியே கவித்துவம் சொட்டச் சொட்ட வழிகிறது. அவரது மொழிநடையிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

சில பழைய பாடல்கள்

This gallery contains 10 photos.

சக மனிதர்கள் மீது, சக உயிர்கள் மீது கதாபாத்திரங்கள் காட்டும் அன்பு, காதல், ஸ்நேகம் ஆகிய மென்னுணர்வுகள் என்ற அடித்தளத்தின் மீது வண்ணதாசனின் உலகம் பகட்டும் ஆரவாரமுமற்ற கம்பீரத்துடன், தன்னைப் புரிந்து கொண்டு நெருங்கி வருகிறவனுக்கு தன் மேன்மைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்த வல்லது. இந்த ஸ்நேகம் எதிர்ப்பார்ப்பு அற்றது; பிரியம் பிரியத்துகாகவே என்பது போல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உயரப் பறத்தல்-வண்ணதாசன் முன்னுரை

This gallery contains 9 photos.

மரியாதையாகப் புன்னகைக்கிறார்கள்; மரியாதையாக வணக்கம் சொல்கிறார்கள்; மரியாதையாக விலகிப் போய்விடுகிறார்கள். மரியாதையின் நான்கு பக்க அலைகளுக்குள் நமக்குத் தீவாந்திரம். நீச்சல் கூடத் தெரியாது. அப்புறம் எதிர்நீச்சலுக்கு எங்கே போக?…….வண்ணதாசன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நிகழக் காத்திருப்பது

This gallery contains 3 photos.

வாழ்க்கைக்கு எது எல்லாம் தேவையோ, அல்லது போதுமோ அது அவற்றுக்கும் பொருந்தும். ஒன்றின் ஜீவன் மற்றொன்றில் இருக்கிறது. எதுவும் வேறு வேறில்லை. எல்லாம் புரியும் தினம் வரும். எல்லாம் தானாகப் புரியவும் செய்யும். அந்த நேரம் முன் & பின் எனினும் அருமையானதாக இருக்கும். எனக்கு எதிர்த்தாற் போல உன்னதமான மனிதர்கள் தட்டுப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்….கல்யாண்ஜி எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

அனுபவங்கள்

This gallery contains 4 photos.

இயற்கை அனைத்தையும் சமன் செய்து கொண்டே இருக்கிறது.  கவிதையும் அப்படிச் சமன் செய்து கொண்டே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  வெயிலும் மழையும், ஒளியும் நிழலும், வெளிச்சமும் இருட்டும் என்று எப்படிச் சொன்னாலும் இரண்டையும் சேர்த்துத் தானே மொழியின் தினங்கள்…………….கல்யாண்ஜி……  

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்