ஆறாவது பயணியின்

 
 
 
இந்த நீண்ட பிற்பகல் பயணத்தில்
இப்போது நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கலாம்.
உடன் வராத இந்த வாகனத்தின்
ஆறாவது பயணியின் ஞாபகங்கள் செய்த விடுதலையில்
நீங்கள் விழித்தும் இருக்கலாம்.
ஓட்டுனரின் விருப்பப் பண்பலை ஒலிபரப்பும்
ஒரு பாடலின் ஒற்றை வரியில்
புதிய அர்த்தங்களைக் கண்டடையும் உங்கள்
புன்முறுவலை ஒளித்துவைக்கலாம்.
எதற்கு ஒளிப்பதென, இன்னும் அகலச் சிரிக்கலாம்.
குளிர்பதனம் மீறிச் சுழன்றுவரும்
இதற்கு முந்திய தேவி தரிசனத்தின்
குங்குமமும் பூவதங்கலும்
உங்கள் மடியில் உறங்கும் பெண்குழந்தையை
முத்தமிட வைக்கலாம்.
அடுத்த திருப்பத்தில் காத்திருக்கும்
அவளுடைய பூப்புக் காலம் குறித்த சிறுகுறிப்பு
எழுதப்பட்ட அந்தக் கன்னத்தை வாசிக்கலாம்.
கண்ணாடியுடன் இடப் பக்கம் சாய்ந்துறங்குபவரின்
அப்பழுக்கற்ற தாடி முகத்தின் ஆதிமூலத்தில்
துளிர்த்துப் பூக்கும் நரைவெள்ளிக்கு
வெளியே விரைந்து மறையும் ஆலமர
விழுதுகளில் அமர்ந்து ஒரு கனவுப் பாடல்
பாடிச் சற்றுக் காமுறலாம்.
முதல் சவரத்திற்கு முந்திய,
புதிர்களின் பகடை உருட்டும் உங்கள்
உங்கள் முன்னிருக்கை மகனின்
பூனைமயிர் மேலுதட்டு மரு
உங்களின் சாயலுடையது எனச் சொன்ன
அந்த உடன் வராத ஆறாவது பயணியின் ஈரக் குரல்
உங்கள் வாகனம் விரையும் நெடுஞ்சாலையை நிரப்பிப் பாய
அடுத்து வரவிருக்கும் நதிக்கரைக் கோவில் கருவறை நோக்கி
இந் நொடியிலிருந்து
நீங்கள் தனித்து நீந்தத் துவங்கலாம்.
………………………………………………………………………..கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s