ஓடிப் போகும் புத்தர்

 

 வந்துசேர்ந்த புத்தர் பிரதிமையை
தொலைக்காட்சி பெட்டியின் மேல் வைக்கிற
வரவேற்பறை ஞானம் எங்களுக்கு இருந்தது.
வீட்டுக்குள் யார்வரினும் இழைகூட
விலகாத புன்னகை அவரிடத்தில்.
தெருவில் கிடந்த வெண்புறா இறகை
நான் தான் எடுத்து அவர் மடி சேர்த்தேன்.
அளவில் பெரியதோர் ஆயுதம் போலவும்
இசைக்கப் போகிற வாத்தியம் எனவும்
ஓரொரு சமயம் தோன்றும் எனினும்
புத்தருக்கு இறகு பொருந்திப் போனது.
முன்னை விடவும் புத்தர் முகத்தில்
முறுவல் சற்று அதிகம் ஆனது.
காற்றில் பறக்கும், எடுத்துவைப்போம்.
கணும் காணாமல் புத்தர் இருப்பார்.
விடுமுறை என்றால் பக்கத்துக் குழந்தைகள்
வீட்டுக்குள் வந்து விளையாடும்தானே.
அதிலொரு குழந்தை புத்தனின் இறகை
ஆசையாக எடுத்துக் கொண்டது.
கையில் இறகைச் சுழற்றிக் கொண்டு
கதவைத் தாண்டி அது போகப் போக,
இதுவரை உயரப் பறந்த புத்தர்,
இறகைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லி
எழுந்து பின்னால் ஓடியே போனார்.
உட்கார்ந்திருக்கும் புத்தரை விடவும்
ஓடிப் போகிறவர் அழகாக இருந்தார்.
 
 
                  ……………………………………….கல்யாண்ஜி
                  டைம்ஸ் இன்று தீபாவளி மலர் – 2011
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

ஓடிப் போகும் புத்தர் க்கு ஒரு பதில்

  1. உட்கார்ந்திருக்கும் புத்தரை விடவும்
    ஓடிப் போகிறவர் அழகாக இருந்தார்.

    புத்தருக்கும் பறவையின் இறகு மீது ஆசையா?
    அற்புதமான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s