காக்கைமை

 
 
புங்கை மரத்தடியில் ஒரு காக்கைக் குஞ்சு
எறும்பு அரித்துக் கிடந்தது பாவமாய்.
காது மூக்கு தொண்டை மருத்துவர்
கட்டுகிற வீட்டுச் செங்கல் பக்கம்
இரட்டைச் சிசுக்களின் மரணம் போல
இறந்து இடந்தன மேலும் இரண்டு.
அன்றைக்கும் இன்றைக்கும் மருந்துக்குக் கூட
எந்தக் காக்கையும் கத்தவே இல்லை.
அணிலை விரட்டிச் சோறு கொத்தின.
தேங்காய்ச் சிரட்டையைத் தூக்கிப் போயின.
எந்தக் கவலையும் இல்லாதது போல்
இறகை எக்கி எச்சம் இட்டன.
காக்கைக் குஞ்சுகள் இறந்ததை விடவும்
காக்கைமை இறந்தது எத்தனை துயரம்.
…………………………………………………………………………………………..கல்யாண்ஜி 

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

காக்கைமை க்கு 4 பதில்கள்

  1. தனபாலன் சொல்கிறார்:

    காக்கைகள் கூடவா மாறி விட்டன? கவிதை அருமை. நன்றி நண்பரே!

  2. R.Raveendran சொல்கிறார்:

    அங்கேயும் அரசியல் ஆரம்பித்து விட்டதா என்ன … ?

  3. Palaniswamy சொல்கிறார்:

    Very good presentation .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s