Monthly Archives: திசெம்பர் 2011

மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது

This gallery contains 1 photo.

மாசிலாமணிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.                 ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும் ஆயிரம் வேலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாசியின் குழந்தையைப்பார்த்துவிடுவது என்பது ஏற்கனவே தீர்மானித்த ஒன்றுதான். மாசி அவ்வளவு தூரத்துக்குச் சொல்லி இருந்தார்.                 மாசி தனியாக வீட்டுக்குவருவதே அபூர்வம். வந்ததே இல்லை என்றுகூடச் சொல்லலாம். கூச்சமா என்ன காரணம் என்று தெரியவில்லை. அநேகமாக வெளியூரில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அவரும் நானும்

This gallery contains 2 photos.

  சந்தடியற்ற ரயில் நிலையத்தில் பரிச்சயமற்ற அவரும் நானும். ‘இந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார். ‘ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள் அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’ என்றேன். அவர் இறந்த காலத்தில் குனிந்து பழுப்பு இலைகளைப் பொறுக்க, நான் மூச்சிழுத்து நுகர்ந்துகொண்டிருந்தேன் பறந்து போன எச்சச் சொட்டுகளை, தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க. …………………………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ரவி சுப்பிரமணியனுக்கு – வண்ணதாசனின் கடிதங்கள்

This gallery contains 8 photos.

கனிகிற காலத்தில் கனிந்து நிற்கிறவர்களைப் பார்க்க எவ்வளவோ சந்தோஷமாகத்தான் இருக்கிறது. . உலகில் நல்லறங்களும் நல்லிசையும் நல்லியல்புகளும் நல்ல மனிதர்களும் போற்றப்படுகிறபோது ஒரு திருவிழாப் போல நிகழ வேண்டும். ஆரவாரமல்ல. நிறைவு, பெருமிதம், எல்லோர் முகங்களிலும் சுடர், ஒருவர் கையை ஒருவர் பற்றி ஒருவர் தோளை ஒருவர் அணைத்து, எல்லோர் கையாலும் சந்தனம், எல்லோர் கையாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சில இறகுகள், சில பறவைகள்” வண்ணதாசன் கடிதங்களின் புதிய தொகுப்பு முன்னுரை

This gallery contains 22 photos.

இரண்டு நாட்களுக்கு முன் யாழினியின் கடிதம் வந்தது, யாழினியின் முதல் கடிதம் அது. யாழினிக்கு எட்டு வயது.  மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள். சேலத்துக்காரி. நான் எழுதியதுதான் அவளுக்கு வந்த முதல் கடிதம். எனக்கு வந்திருக்கிற பதில் அவள் எழுதிய முதல் கடிதம். சரிதான். என்னுடைய வரலாறும் அவளுடைய வரலாறும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய கடிதங்கள் பின்னொரு நாளில் அச்சாக்கப்படும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

வெயில் முடிவு

This gallery contains 1 photo.

ஒரு முடிவு செய்தது போல் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டிருந்தது செடி. ஒரு முடிவும் செய்ய முடியாதது போல் செடியடியில் அசையாதிருக்கிறது சாம்பல் பூனை. ஒரு முடிவும் செய்ய அவசியமின்றி ஊர்ந்துகொண்டே இருக்கிறது செடியின் மேல் வெயில். ………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ராமகிருஷ்ணன் – வண்ணதாசன் கடிதம்

This gallery contains 2 photos.

வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன்.  அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் அழகு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நகர்வு

This gallery contains 2 photos.

    ஆற்றில் குளிப்பவர் எல்லோர்க்கும் பிடித்திருக்கிறது அசைந்து மிதந்துவரும் பூவை. அது தங்களுக்கு  என்று நினைத்து நீந்துகிறார்கள் அதன் திசையில். பூவோ நகர்கிறது நீச்சல் தெரியாது ஆறு பார்த்து அமர்ந்திருக்கும் சிறு பெண் நோக்கி. ……………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மரபில்லாமல் புதுமையில்லை

This gallery contains 1 photo.

( தினமணி சுடர் – 11.07.1992 இதழில் வெளியான தி.க.சி.யின் பேட்டி ) உங்களது வாரிசான வண்ணதாசன் திறமைமிக்க இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்து வருகிறார். அந்த ஆர்வத்துக்கு உங்களின் பங்களிப்பு என்ன? உங்களது அப்பாவிடமிருந்து உங்களுக்கு எத்தகைய உதவி கிடைத்தது ? என் பையனுக்குப் படைப்புக் கலையில் எந்தவித உதவியையும் நான் செய்யவில்லை. மேலும் பணியின் நிமித்தமாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சாயல்

This gallery contains 1 photo.

என் சின்ன வயதில் சட்டையில்லாத அப்பா எப்படியோ இருப்பார். அவருடைய தளர்ந்த இந்த வயதில் சட்டை போட்டால் அப்பா எப்படியோ இருக்கிறார். அப்படியே இல்லாமல் இருப்பதுதான் அவருடைய சாயல் போல. ………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுகாவுக்குப் பூசினது

This gallery contains 7 photos.

வண்ணதாசன் (சென்ற வருடம் சொல்வனம் பதிப்பகம் வெளியிட்ட சுகாவின் ‘தாயார் சன்னதி’ புத்தகம், இந்த வருடம் புத்தகக் கண்காட்சிக்கு இரண்டாம் பதிப்பாக வெளியாகிறது. முதல் பதிப்புக்கு எழுத்தாளர் வண்ணதாசன் எழுதிய முன்னுரை.) சுகாவுடைய இந்தப் புத்தகத்துக்கு என்ன பெயர் என்றே தெரியாது. மனுஷனுக்குப் பெயர் வைக்கலாம். நெல்லையப்பன், கோமதிநாயகம், ஆவுடையப்பன், சங்கரலிங்கம், காந்திமதி, தெய்வானை, இசக்கி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பற்பசைக்குழாயும் நாவல்பழங்களும்

This gallery contains 1 photo.

வண்ணதாசன் (அநேகமாக வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளுமே எனக்கு மனப்பாடம். அவரது கதைகளிலேயே என் மனதுக்கு நெருக்கமான சிறுகதையாக நான் கருதுவது, ‘பற்பசைக்குழாயும், நாவல்பழங்களும்’ என்ற கதையைத்தான். வண்ணதாசன் தனது சிறுகதைகளில் பெரும்பாலும் கதை சொல்ல முனையமாட்டார் என்பதற்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம். நினைவிலிருந்தே என்னால் சொல்ல முடிகிற ஒரு நல்ல கவிதை, இந்தக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சினேகிதிகள்

This gallery contains 13 photos.

உயிர் எழுத்தின் முக்கியமான சிறப்பு அது படைப்பிலக்கியத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதே. குறிப்பாக அதில் வரும் சிறுகதைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. புதிய படைப்பாளிகள் அதிகமாக எழுதும் இதழாக உள்ளது அது. பல கதைகள் தொடக்க முயற்சிகள். ஆயினும் இது முக்கியமான ஒரு போக்குதான். இவ்விதழில் வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 8 பின்னூட்டங்கள்

எளிய கேள்விகளின் மேல்

This gallery contains 2 photos.

    சாய்ந்து வளர்ந்து பூச்சொரியும் சிவப்பு மரமல்லி மரம் தன் கிளைகளைப் பாதிக்கு மேல்  தெருவுக்குத் தர அனுமதித்து சுற்றுச் சுவரை இடித்துவிட்ட கருணைமிக்கவர் யார் இந்த வீட்டில்? சதா யாருடனாவது பேசிக்கொண்டே பழுதுற்ற கண்ணுடன் சூரியன் பார்த்துச் சிரிக்கும் முதிய காவலரின் கனவில் சமீபத்தில் அம்மன்புரத்துப் பனைவிடலி அசைந்ததுண்டா? ஏழு செவலைக்குட்டிகளுக்கும் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யாரிடம்

This gallery contains 1 photo.

    அவுரிச் செடி மூட்டில் அமர்ந்திருக்கும்  இப் பறவையின் பெயர் என்னவென யாராவது கேட்டால் சொல்லிவிடலாம். பெயர் தெரிந்தது போல் எல்லோரும் பெயர் தெரியாத பறவையைத் தாண்டிப் போய்க் கொண்டிருகிறார்கள். யாரிடமாவது சொல்வதற்குள் பறந்துவிட்டதெனில் யாரிடம் சொல்வேன் செம்போத்து எனும் பெயரை? ……………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தெரிந்து செயல் வகை

This gallery contains 2 photos.

தெரியும். கொஞ்சம் உரைநடைத்தன்மை அதிகம். தெரிந்துதான் இப்படி எழுதினேன். அல்லது எழுதின உடனேயே தெரிந்துகொண்டேன், இவை இப்படி இருக்கின்றன என்று. எப்படி எப்படியெல்லாமோ இருக்கிற, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என உரிமம் பெற்றது போல எழுதப்படுகிற இன்றைய நவீன கவிதைகளின் போக்கில், இப்படி இருப்பதற்கும் இடமும் பொருளும் ஏவலும் உண்டு நிறையவே. கதைக்காரர்கள் அனுபவச் சாற்றின் கடைசிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாரல் விருது 2012 அழைப்பிதழ்

This gallery contains 12 photos.

வண்ணதாசன் எழுத்துக்கள்  . எளிமையும் நேர்மையின் நீர்மையும் நிறைந்த அவ்வெழுத்துக்கள், ஒளியற்ற மனங்களிலும் அன்பின் அகலை ஒளிரவிட்டு சப்தமின்றி நகர்பவை……………………………  ரவிசுப்ரமணியன் ..

More Galleries | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

சாரல் இலக்கிய விருது 2012

This gallery contains 3 photos.

திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். இந்த இரண்டு மகத்தான இலக்கிய ஆளுமைகளை இந்த ஆண்டின் சாரல் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கிறோம் 2012ம் ஆண்டுக்கான சாரல் விருது இரண்டு விருதுகளாக இரண்டு எழுத்தாளர்களுக்கு தனித்தனியே வழங்கப் பட உள்ளது. விருது பெறுபவர்கள் திரு வண்ணநிலவன் மற்றும் திரு வண்ணதாசன். வண்ணதாசன் தூரத்தில் தலை கோணி சங்கோஜமாய் நின்றபடியே, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

தொடர்ச்சி- ஒளியிலே தெரிவது

This gallery contains 10 photos.

மதிப்புகள் valueக்கள் என்றெல்லாம் யோசித்தால் இவையெல்லாம் என்ன? எந்தத் தத்துவ இழைகளின் முடிச்சில் இந்த அனுபவ உண்மைகளைக் கட்டித் தொங்கவிட. வாழ்க்கையில் பிரச்னைகளே இல்லை என்று நான் நிரூபிக்க முற்படுகிறேனா? எந்த நிரூபணங்களையும் நோக்கி என் வரிகளை நகர்த்தவேயில்லை நான் தண்ணீரற்றுத் தவித்துக் கிடக்கையில் உனக்கென்ன இத்தனை சொரிவு என்று குல்மோஹர் மரங்களை யாரும் கேட்டதுண்டா? … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்