பழுப்பு

அசையாமல், இறுக்கமாக
அடர்ந்த மரத்தில்
துளிர் இலை.
உதிர்தலைக் கொண்டாடியபடி
கிளையைப் பிரிந்து
சுழன்று சுழன்று இறங்குகிறது
ஒரு பழுத்த இலை.
……………………………………………………………………..கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு, வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to பழுப்பு

  1. don stony சொல்கிறார்:

    சார்.. .சுப்ப்ர்

  2. nilaamaghal சொல்கிறார்:

    உதிர்த‌லைக் கொண்டாட‌ப் ப‌ழ‌க‌ வேணும் ம‌ர‌ங்க‌ளிட‌மிருந்து! ந‌ம் எல்லா வாதைக‌ளுக்கும் ந‌ம்மைச் சுற்றியே ம‌ருந்திருக்கிற‌து பாருங்க‌ள்! த‌ங்க‌ள் பார்வையின் நுட்ப‌மும் புரித‌லும் எப்போதும் போல் விய‌ப்பின் எல்லையில் கொண்டு நிறுத்துகிற‌து என்னை.

  3. ramani சொல்கிறார்:

    இங்கே உதிர்வதைக் கொண்டாடுவது மரங்களல்ல. உதிர்கின்ற இலைகளேதான். எதையும் கொண்டாடுவது, அதுவும் உதிர்தலைக்கூடக் கொண்டாடுவது மனமுதிர்ச்சியின் உச்சம். ஆனால் உதிர்தல் என்பது காலம் விதித்த எல்லையில் நிகழ்வது. பச்சை இலைகளை யாரேனும் மரத்திலிருந்து கிள்ளி எறிந்தால் பச்சையும் ஈரமும் கனக்க அது ஒன்றும் கொண்டாடிக்கொண்டே விழுவதில்லையே

பின்னூட்டமொன்றை இடுக