சாரல் விருது 2012 அழைப்பிதழ்

வண்ணதாசன் எழுத்துக்கள்

 .

எளிமையும்
நேர்மையின் நீர்மையும் நிறைந்த அவ்வெழுத்துக்கள்,
ஒளியற்ற மனங்களிலும்
அன்பின் அகலை ஒளிரவிட்டு
சப்தமின்றி நகர்பவை…………………………...  ரவிசுப்ரமணியன்

..

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் and tagged , , , , , , , , . Bookmark the permalink.

சாரல் விருது 2012 அழைப்பிதழ் க்கு 6 பதில்கள்

  1. “கரிசனக் கனிவை சுமந்த படியும்
    புதுப்புது சாளரங்கள் திறந்த படியும்
    ஸ்தூலமாய் ஒலிக்குமந்த சுநாதத்தை
    ஒரு முறைக் கேட்டவனும்
    பாக்கியவான்தான்”
    வண்ணதாசன், வண்ணநிவலன் எழுத்துகளை வாசிக்கும் அனைவரும் பாக்கியவான்கள்தான். சாரல் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
    -சித்திரவீதிக்காரன்.

  2. Pingback: சாரல் விருது » ஜெயமோகன்

  3. rishvan சொல்கிறார்:

    உங்களின் தீவிர ரசிக்ன்…. உங்கள் கதைகள் அனைத்தும் பிடிக்கும். நானும் கதை, கவிதை எழுதுகிறேன்…

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

  4. Firthouse Rajakumaaren. சொல்கிறார்:

    சாரல் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

  5. மழை சொல்கிறார்:

    தங்கள் இணையப்பக்கம் முழுதும் அருமை.தொடர்ந்து எழுதுங்கள்:)

  6. சுந்தர்ஜி சொல்கிறார்:

    என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன்.

    என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியது இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான்.

    பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்க வைத்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை தனக்கென தனித்தனியே உருவாக்கிக் கொண்டவர்கள்.

    வாழ்வின் பொருளையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் வாசகனை உருக்கி வார்த்ததும் இவர்களின் ஆகிருதிகள்தான்.

    விருதுகளைக் கடந்த எழுத்து இவர்களுடையது. இவர்கள் இதுவரை எழுதியதன் மூலமாகவே இவர்களுக்குள் இருக்கும் எழுதாத பகுதிகளிலும் வெளிச்சமிட்டுக் காட்டிய மேன்மையான கலைஞர்கள்.

    இவ்ர்கள் என் எழுத்துக்கு ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

    சாரல் விருது இவர்கள் மேல் தூவப்படுகிறது நாளை (07-01-2012) மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில்.

    நேற்றின் வண்ணங்களும் நாளையின் சுகந்தங்களும் நிரம்பிய மலர்கள் உங்கள் இருவரின் கையெட்டும் தொலைவிலேயே என்றும் மலரட்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s