மரபில்லாமல் புதுமையில்லை

( தினமணி சுடர் – 11.07.1992 இதழில் வெளியான தி.க.சி.யின் பேட்டி )
உங்களது வாரிசான வண்ணதாசன் திறமைமிக்க இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்து வருகிறார். அந்த ஆர்வத்துக்கு உங்களின் பங்களிப்பு என்ன? உங்களது அப்பாவிடமிருந்து உங்களுக்கு எத்தகைய உதவி கிடைத்தது ?
என் பையனுக்குப் படைப்புக் கலையில் எந்தவித உதவியையும் நான் செய்யவில்லை. மேலும் பணியின் நிமித்தமாக நான் குடும்பத்திலிருந்து பிரிந்து பல ஆண்டுகள் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. என் வீட்டின் நூலகத்தில் நிறைய அரிய புத்தகங்கள், பத்திரிக்கைகளைச் சேகரித்து வைத்திருந்தேன். பாரதி, புதுமைப்பித்தன், டி.கே.சி., கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, பாரதிதாசன், திரு.வி.க, காண்டேகர், சரச்சந்திரர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், இன்னும் பிற பிரபலமானவர்களின் நூல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றைப் படித்து வண்ணதாசன் தன்னை விருத்தி செய்யும் வாய்ப்பு ஒரளவு இருந்தது.
ஒரு படைப்பாளியின் உருவாக்கத்திற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன.என் தகப்பனார் எனது ஏழு வயதில் காலமானார்.என்னுடைய இலக்கிய வளர்ச்சிக்கு என் அப்பாவிடமிருந்து எந்த உதவியும் பெற இயலவில்லை.
ஒரு படைப்பாளி உருவாதற்கு அவனது அழகியல் கண்ணோட்டம், வாழ்க்கை அனுபவம், கலா பூர்வமான உந்துதல், அவனது உழைப்பு, பயிற்சி , விடா முயற்சி முதலிய பல காரணங்கள் உள்ளன. வண்ணதாசன் என்ற கலைஞனின் வளர்ச்சிக்கு எத்தனையோ அக, புற காரணங்கள் உண்டு. வல்லிக்கண்ணனும் ஆரம்ப காலத்தில் அவனுக்கு வழிகாட்டியாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: தி க சி : http://thikasi.blogspot.com/2011_11_01_archive.html
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , . Bookmark the permalink.

3 Responses to மரபில்லாமல் புதுமையில்லை

 1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  உயிர் எழுத்து பேட்டி/வேறு பத்திரிக்கை பேட்டியில் அய்யா திகசி கூறியது:

  என் மகன் (வண்ணதாசன்) ஒரு பெருந்தகையாளன். இன்றுவரை தனது புத்தகத்தைப் படியுங்கள் அப்பா என்று என்னிடம் கூறியது(வற்புறுத்தியது) இல்லை.

  பேட்டி சுட்டியைத் தேடித் பார்க்கிறேன்

 2. nilaamaghal சொல்கிறார்:

  ஒரு படைப்பாளி உருவாதற்கு அவனது அழகியல் கண்ணோட்டம், வாழ்க்கை அனுபவம், கலா பூர்வமான உந்துதல், அவனது உழைப்பு, பயிற்சி , விடா முயற்சி முதலிய பல காரணங்கள் உள்ளன//

  1992‍ல் அளித்த‌ பேட்டியின் உயிர் கால‌கால‌த்துக்குமாய்…!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s