வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன். அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் அழகு கூடியிருக்கும். அவரது உள்ளமென்னும் முப்பட்டகத்திலிருந்து தெறித்துச் சிதறிய வாழ்வியல் சிந்தனைகளை எடுத்து உங்கள் முன் அளித்தால் உன்னதமாய் இருக்கும்……………தி சுபாஷிணி
…………………………..வண்ணதாசன்
அருமை.
தோப்பில் மீரான் வாசிக்கப்பட வேண்டிய எழுத்துத்தான். கிணற்றுத்தண்ணீர் பாய்ச்சி வளர்கிற கீரைப்பாத்தி மாதிரி ரொம்பவும் அசலும் ஜீவனுமிக்க எழுத்து. தன் ஞாபகம் இல்லாதவன் தான் கலைஞன். மீரானுக்குத் துளிகூட இல்லை. தன்னை மறந்து அப்படியே லயித்துக் காரியம் ஆற்றியிருக்கிறார். இந்த மனம் இந்தக் காலத்தில் அபூர்வமானது. எல்லாப் படைப்பாளிகளிடமும் இருக்க வேண்டியது.அநேகமாக காணாமல் போய்விட்ட ஒன்று.அருகிக் கொண்டே வருகிற அபூர்வபறவை மாதிரி அது.
-வண்ணதாசன்.
அற்புதமான வரிகள். பகிர்விற்கு நன்றி.