வரைபடம்

 

 

வாசலில் வந்துநின்று கெஞ்சிய
விற்பனைப் பெண்ணிடம்
வாங்கியது அந்த உலக வரைபடம்.
படுக்கையறைத் தலை மாட்டில்
தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து
நம் ஊர் எங்கே என்றாள்.
நம் வீடு இருக்கும் இடம் எது
என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை.
அவள் பள்ளிக் கூடம்,
அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி
மேற்கொண்டு என்னிடம் கேட்பதில்
பயனில்லை என்ற முகக் குறிப்புடன்
குதித்துக் கொண்டே விளையாடப் போனாள்.
இந்தக் கண்டம் அந்தக் கண்டம்
எதிலாவது
வாசலில் வந்து விற்ற பெண்ணின்
ஆதரவற்ற முகமோ, விடுதியோ
தெரிகிறதா என்று உற்றுப்பார்க்கத்
துவங்கினேன் அப்புறம்.
……………………………………………………………………….கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், மணலுள்ள ஆறு and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

வரைபடம் க்கு 5 பதில்கள்

  1. வாசலில் வந்து விற்ற பெண்ணின்
    ஆதரவற்ற முகமோ, விடுதியோ
    தெரிகிறதா என்று உற்றுப்பார்க்கத்
    துவங்கினேன் – கல்யாண்ஜி
    அற்புதமான கவிதை. பள்ளிநாட்களை நினைவூட்டிய கவிதையும் கூட. நான் இப்போது வரைபடங்களைப் பார்க்கும் போதெல்லாம் மதுரையைத்தான் முதலில் பார்ப்பேன். மதுரையைக் குறிப்பிடாத உலகவரைபடங்களை நான் விரும்பி பார்ப்பதுமில்லை. மதுரை வரைபடம் என்றால் விரும்பி ஒவ்வொரு பகுதியாக பார்ப்பேன். பகிர்விற்கு நன்றி.

  2. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமை.
    வாழ்த்துகள்.

  3. Nazir Ahamed சொல்கிறார்:

    உலகம் தான் எவ்வலு மாறிப்போய் விட்டது… இப்போது கூகிள் மேப்சில்
    நம் ஊர், நம் வீடு இருக்கும் இடம், அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு எல்லாமும் தெரிகிறது….

    ஆனால் கல்யாண்ஜியின் விற்பனை பெண்ணின் நிலை மட்டும் அப்படியே தான்

  4. R.Raveendran சொல்கிறார்:

    கீரையும், வரைபடமும், விற்று குடும்பத்தை கரை சேர்க்கும் பெண்களிடம் பேரம் பேசும் சாமர்த்திய சாலிகளை என்ன செய்யலாம் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s