காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

http://uyirmmai.blogspot.com/2005/02/5.html
பலிச்சோறு படைப்பது போலிருக்கிறது
ஆவி பறக்கிற உன் காமம்.
பீரிட்டுக்கொண்டிருக்கிருக்கிற
வக்கிரம் அனைத்தையும்
உன் வெதுவெதுப்பான மார்பு கரைத்துவிடுகிறது.
காணாமல்போன சீப்பைமுன் வைத்து
நிலைக் கண்ணாடி உடைக்கிற என்கோபத்தை
உறிஞ்சிக்கொள்கிறது உன் ஆழ்ந்த முகம்.
மாந்தளிர் அசைக்கும் சிறுசெடிக்கு
நீர் வார்க்கிறது உன் முத்தம்.
விருப்பு வெறுப்புகளின் அமில எச்சிலை
என் வாயோரங்களிலிருந்து துடைத்துக்
கொண்டிருக்கிறது உன் வெளிறிய விரல்கள்.
எஞ்சிய என் கருத்த கசடுகளின்
ரகசிய அம்பு எய்யப்படக்
காத்திருக்கிறது உன் உந்திச்சுழி.
குருவையும் கடவுளையும் பிரீதி செய்ததில்
செம்பருத்தி உருண்டுவிழுகிறது உன் யோனியில்.
அப்பழுக்கற்றதாக இருக்கிறதாகச்
சொல்கிறார்கள்.
வீட்டுக்கு வெளியில்
நான் விடுகின்ற மூச்சு.
………………………………………………………….கல்யாண்ஜி

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to காதல் கவிதைள்:5 கல்யாண்ஜி

 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  நல்ல கவிதை.
  வாழ்த்துகள் ஐயா.

 2. B.AMBALAVANAN சொல்கிறார்:

  BUT FOR THE FEMALE ACQUINTANCE,WHERE MAN CAN RELAX FROM HIS TENSION&WORRIES.

 3. அற்புதமான கவிதை. பகிர்விற்கு நன்றி.

 4. gopal manogar சொல்கிறார்:

  உணர்ச்சிகளை நாம் வியக்கும் வண்ணம் நேரடியாக நமக்குள் இட மாற்றம் செய்பவை கல்யாண்ஜி கவிதைகள். ஆனால் .. இந்த கவிதையில் ..முதல் இரண்டு வரிகளைத் தவிர அந்த ரசவாதம் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை .. எடுத்துக்கொண்ட விசயமும் எளிதில் பிடிபடக்கூடியதா என்ன .. என்றாலும் வண்ணதாசனை என்றும் வாசித்துக்கொண்டே இருக்கலாம் ! நன்றிகள் பல..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s