ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

ஒரு முழுத் தென்னங்கீற்றுத் தோகையில், சற்றுப் பிய்ந்த ஒரே ஒரு கீற்று மட்டும் காற்றில் ஒரு பெரு நடனமிட்டு, அதன் ஊழியை அது அறிந்து ஊர்த்துவமிட்டதை எங்கள் நிலக்கோட்டை வாடகை வீட்டுத் தென்னையில் பார்த்திருக்கிறேன். ஆயிரக் கணக்கான அடர் இலைகளுடன் கவிந்து நிற்கும் ஒரு அரசமரத்தின் ஒற்றை இலை மட்டும் தன் மொத்த ஜீவனுடன் சிலிர்ப்பதை, அதன் மேல் பசுமை மினுமினுப்பதை, அது மிகுந்த நிம்மதியுடன் இருப்பதையெல்லாம் நான் அந்தத் தென்னங்கீற்றின் இருப்பின் வழியும் தவிப்பின் வழியும் அறிந்திருக்கிறேன்…….வண்ணதாசன்

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to ஒரு மரம், ஒரு பறவை, ஒரு மனிதன்

  1. Uma Jayaraman சொல்கிறார்:

    இதைப் படித்து விட்டு,
    நானும் “ஹா” சொல்லுவேன்.
    அருமை யாக இருக்கிறது.
    Uma Jayaraman.

  2. nilaamaghal சொல்கிறார்:

    தாத்தா கைக‌ளை முக‌ர்ந்து ‘ஹா’ சொன்ன‌தைப் ப‌டிக்கும்போது அனிச்சையாக‌ என‌க்கும் ஒரு பெருமூச்சு இழைந்த‌து. வாத‌முட‌க்கி இலைச்சாறின் வாச‌ம் உண‌ரும்ப‌டி.

  3. solomon paul jayaraj சொல்கிறார்:

    பாலியத்தை முதலிலேயே சரியாகத்தான் படித்தேன். ஏன் பின் பிராக்கெட்.
    மிக வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிற வாழ்கையை சற்று நிதானமாய் பார்கவைகிற நின்று பார்கவைக்கிற எழுத்து.
    நன்றி

  4. Uma Jayaraman சொல்கிறார்:

    இதைப் படித்து விட்டு,
    நானும் “ஹா” சொல்லுவேன்.
    அருமை யாக இருக்கிறது.
    Uma jayaraman

  5. rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

  6. Mohamed Haroon சொல்கிறார்:

    மனதைத் தொடும் படைப்பு..

    • Nithya சொல்கிறார்:

      இன்றைய தினங்களில் உண்ணுவது, உறங்குவது போல அத்தியாவசியமாய்ப் போய்விட்டன உங்கள் எழுத்துக்களை சுவாசிப்பதும்…
      நண்பர்களுடன் உங்கள் எழுத்துக்களை குறித்து விவாதிக்கும் நேரங்களில் அவர்களுடனான நெருக்கம் அதிகமானதை உணர்ந்திருக்கிறேன்…
      எப்படி சக மனிதர்களிடம், உயிருள்ள, உயிரில்லாதவிடத்தும் அன்புகாட்ட சதா போதிப்பதாய் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s