என் இரு ஆசான்கள்

 ∞கைகள் அள்ளிய நீர்∞
என் இருபது வயதுகளில் இந்த இருவரின் கையைப் பிடித்துத்தான் நடை பழகியிருக்கிறேன்.
என் பல கவிதைகளின் முதல் வரியையல்ல வார்த்தையைக் கூட எழுதத் தயக்கமூட்டியவை இவர்களின் மொத்த எழுத்துக்கள்தான்.
பல நாட்களின் பசியையும் பல இரவுகளின் உறக்கத்தையும் மறக்கடித்த கதைகளையும் கவிதைகளையும் சொல்ல யாரையும் முன்மாதிரியாகக் கொள்ளாத ஓர் பாணியை தனக்கென தனித்தனியே உருவாக்கிக் கொண்டவர்கள் இவர்கள்.
வாழ்வின் தடத்தையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் வாசகனை உருக்கி வார்த்ததும் இவர்களின் ஆகிருதிகள்தான்.
விருதுகளைக் கடந்த எழுத்து இவர்களுடையது. இவர்கள் இதுவரை எழுதியதன் மூலமாகவே இவர்களுக்குள் இருக்கும் எழுதாத பகுதிகளிலும் வெளிச்சமிட்டுக் காட்டிய மேன்மையான கலைஞர்கள்.
இவர்கள் என் எழுத்துக்கு ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.
தொடர்ந்து படிக்க :∞கைகள் அள்ளிய நீர்∞
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to என் இரு ஆசான்கள்

  1. ramji_yahoo சொல்கிறார்:

    .யாருமே கவலைப்படாத புகைவண்டிக்குள் கழிவறைக்குள் மல்லாந்துகிடக்கும் பாச்சையைப் பற்றி வண்ணதாசனால் மட்டுமே இத்தனை கருணை வழியும் தெய்வீக சொற்களுடன் கவிதைஎழுத முடியும். பல இரவுகள் அந்தக் கவிதையால் துர்ங்கமுடியாமல் தவித்திருக்கிறேன். வண்ணநிலவனின் சொற்களுக்குள் கடலுக்குள் மூழ்கியவன் போல் மூழ்கி தவித்த தருணங்கள் உண்டு.- HARANI

  2. வாழ்வின் தடத்தையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல வீசி வீசி என்னைப் போன்ற கரையில் நிற்கும் வாசகனை உருக்கி வார்த்ததும் இவர்களின் ஆகிருதிகள்தான்.\\ அற்புதமான வரிகள். பகிர்விற்கு நன்றி.

  3. nilaamaghal சொல்கிறார்:

    எத்தனை ஏகலைவர்களுக்கு ஆசானாய் இருந்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும். கட்டை விரல் கேட்காத ஆசான்கள்!

    வாழ்வின் தடத்தையும் அன்பின் கசிவையும் ஓயாத கடல் அலை போல//

    விருதுகளைக் கடந்த எழுத்து //

    ந‌ல்ல‌ எழுத்து! ந‌ல்ல‌ ம‌ரியாதை! ந‌ல்ல அறிவிப்பு!

    வ‌ண்ண‌தாச‌னை வாசித்த‌ அள‌வுக்கு நான் இன்னும் வ‌ண்ண‌ நில‌வ‌னை வாசித்து உள்வாங்க‌வில்லை.

    இவர் என் எழுத்துக்கும் ஆதர்சம் என்று சொல்லிக் கொள்வதில் நான் கர்வமும் பெருமையும் கொள்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s