பரவச ஈக்கள்

கல்யாண்ஜி
நூறு இருக்கும், ஆயிரம் இருக்கும்
அதற்க்கு கூடுதலாகவும்
மீன்கூடையின் ஈயவிளிம்பில்
மரணத்தின் உப்பு வாசனை மொய்க்கும்
பரவச ஈக்கள்
பார்க்க பார்க்க மினுமினுத்தன
எத்தனை கோடியோ
இன்பம் வைத்த சிறகுகள்.
இத்தனையும் வண்ணத்துப் பூச்சிகளாக
இருந்துவிடும் எனில்,
அவை அமர
அத்தனை எண்ணிக்கைப் பூக்களுக்கு
எங்கே போவேன் நான்
என் சிவனே.
ஓவியம்: மணி வர்மா   https://www.facebook.com/manivarma

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

8 Responses to பரவச ஈக்கள்

 1. அற்புதமான கவிதை. ஈக்கள் எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாக மாறினால் அவ்வளவு பூக்களுக்கு நான் எங்கே போவேன் என்பது அற்புதமான கற்பனை. மணிவர்மாவின் ஓவியமும் ரொம்ப அழகாய் இருந்தது. பகிர்விற்கு நன்றி.

 2. ramji_yahoo சொல்கிறார்:

  nice poem

  Sulthan Brother- Mr. Vannathaasan has started a new blog as Samaveli. To avoid confusion you should give the link here or to merge this with that, Please

 3. Harani சொல்கிறார்:

  அன்புள்ள…

  கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுத்துலகில் இருக்கிறேன். எங்கள் பிதாமகர் தஞ்சை ப்ரகாஷ் சொல்லிக்கொடுத்த காலத்திலிருந்து வண்ணதாசனை வாசித்துவருகிறேன். இந்த மனிதருக்கு மட்டும் எப்படி இப்படி பொருண்மை துள்ளுகிறது. உலகத்தின் ஒட்டுமொட்ட கவிதை ஞானத்தையும் தானே யாருக்கும் தெரியாமல் வரமாகப் பெற்றதுபோல. பொறாமையாக இருக்கிறது. வண்ணதாசனை வாசிக்காமல் ஒருவனோ ஒருத்தியோ படைப்புலகில் இருப்பது சவத்திற்கு சமம். உச்சரிக்கும் வார்த்தைகளும் சவமே. மீன்கூடையின் ஈக்களை அவற்றின் வாழ்வியலுக்காக இரங்கி வண்ணத்துப்பூச்சிகளாக மனதிற்குள் எண்ணிப்பார்ப்பதும் அத்தனைக்கும் எத்தனை பூக்களோ அதற்கு எங்கே போவேன் என்று கவிதையுள்ளம் கொடுத்த சிவனிடமே கேட்கிறார். என்ன ஞானமிக்க கவிதையிது. இது சிவனைக் கேட்கும் இறையுள்ளம். ஈக்களைப் படைத்தது ஈன வாழ்க்கையல்ல. அவற்றை வண்ணத்துப்பூச்சிகளாகப் படைக்காதது யார் குற்றம்? இல்லை ஈக்களாக ஏன் பார்க்கவேண்டும் வண்ணத்துப்பூச்சிகளாகப் பார்த்தால் என்ன குற்றம்? அப்புறம் என்ன நீ படைப்பாளி? எத்தனை கேள்விகள். கவிதைகள் பற்றி அதிகம் பேசுவதினும் எழுதுவதினும் அனுபவிக்கவேண்டும். அனுபவிக்கிறேன். அதைவிட என்ன சுகம் கிடைத்துவிடமுடியும் ஒரு படைப்பாளனுக்கு, ஆனந்தப்பரவசம்.

 4. nilaamaghal சொல்கிறார்:

  ஈக்க‌ளெல்லாம் வ‌ண்ண‌த்துப் பூச்சிக‌ளாக‌ மாற்றும் சிவ‌னே மீன்க‌ளை ஈக்க‌ளின் எண்ணிக்கையில் பூக்க‌ளாக்கி விட‌ட்டும்!

 5. T.P.Rajapandian சொல்கிறார்:

  Fantastic Mr.Vannadasan, I have no words to appreciate your thoughts andthe way u have put them in words.

 6. Pingback: பரவச ஈக்கள் – இரசவாதம்

 7. இளந்தென்றல் (@Elanthenral) சொல்கிறார்:

  உங்களுக்கு தான் அவை
  ஈக்கள்
  தங்களுக்கு
  அவை பட்டாம்பூச்சிகளே!

  நாம் தான்
  அவை நுகரும் போது
  நம்மை ஈக்களின் பூக்களாய்
  உணர்வதில்லை.

  -இளந்தென்றல் திரவியம்

 8. விஜயலட்சுமி சொல்கிறார்:

  ஆம்.அதனதற்கு அதனதன் இடம் வாழ்வின் லயம் கெடாத வகையில் இருக்கிறது.லயத்தை உணரத்தெரிந்த இவரைப் போன்றவர்கள் இசையில் வாசிப்பவர்களை மூழ்கச்செய்யும் வித்வான்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s