தரையில் விழுந்த பூ

கல்யாண்ஜி
வரவேற்பு வாசலில் எடுத்துக் கொள்ள
காம்புடன் ரோஜா பூ வைத்திருந்தார்கள்.
ஏற்கனவே அவை புத்தம் புதுப் பூ.
இவள் தேர்ந்துகொண்டதோ புதிதினும் புதிய பூ.
பேசிக்கொண்டே செருகினால் எப்படி?
சரியாய் அமராமல் கீழே விழுந்தது.
குனிந்து எடுத்துக் கொண்டு மறுபடி
சூடிக் கொண்டால் என்ன? இன்னொரு
பூவை எடுத்தாள், தலையில் வைத்தாள்.
போய்க்கொண்டிருந்தாள். தரையில் விழுந்த பூ
யார் குனிந்தெடுப்பார் என்ற யூகத்தில்
எல்லோர் முகத்தையும் பார்த்துச் சிரித்தது.
யார் நமை மிதிப்பார் என்ற கவலையும்
இல்லாமல் இல்லை. இருக்கும் தானே.
Advertisement

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged , , , , , , , . Bookmark the permalink.

8 Responses to தரையில் விழுந்த பூ

 1. எடுத்த பூக்களின் மகிழ்ச்சி ஒருபுறமிருக்க தவறிய பூவின் எதிர்பார்ப்பை சொல்லும் அழகான கவிதை.
  வண்ணதாசனுக்கும், வண்ணநிலவனுக்கும் பூக்கொடுக்கும் அந்தப் பிஞ்சுக்கைகள் கொடுத்துவைத்தவை.
  பகிர்விற்கு நன்றி.

 2. nilaamaghal சொல்கிறார்:

  யார் ந‌ம்மை மிதிப்பார் என்ற‌ க‌வ‌லை மீறிய‌ சிரிப்புட‌ன் நாமிருக்க‌ பூவிட‌ம் க‌ற்போம்.

 3. karthik சொல்கிறார்:

  thannai poovaaga karuthiyathal than thavaravittaalo antha poovai

 4. Anand Sidharth சொல்கிறார்:

  When I read vannadasan it always feels that I am reading myself…

 5. என்னால் பூக்களை விட முடியவில்லை. அது குளத்திலாயினும், தோட்டத்திலாயினும், தோட்டத்திற்கு வெளியிலாயினும். ஏதாவது ஒரு வகையில் என் வரிகளுக்கும் அதற்குமான சம்பந்தம் தீர்ந்துவிடவில்லை. ‘விடுமென்று தோன்றவில்லை.’ விடவேண்டும் என்ற அவசியமுமில்லை. பூ எதற்குத் தீர வேண்டும். தீ எதற்கு அணைய வேண்டும்? – வண்ணதாசன் (தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் – முன்னுரையில்)

 6. KAAMARAAJ சொல்கிறார்:

  poo polave azhgu

 7. R SUNDARARAMAN சொல்கிறார்:

  vannadasan’s narrations are exceptionally good ………………………………………….niraya ezhuthugal ungal arivu in the mannirku payan pada vendum

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s