வண்ணதாசனுடன் பேசுங்கள் 19-7-2012 முதல் 25-7-2012வரை

இன்று… ஒன்று… நன்று!
விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… நான் வண்ணதாசன்… இதுவரை என் கதை, கவிதை கள் மூலம் உங்களோடு உரையாடியவன் இப்போது நேரடியாகப் பேசவிருக்கிறேன்!
நடைப் பயிற்சியின்போது பாதி மாம்பழம் உங்களைத் தடுக்கினால், நேற்று போட்ட வாதாம்பழம் கிடந்தால், இயற்கையை ஒட்டித்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள் எனச் சந்தோஷப்படுங்கள். கடவுள் துகளையே கைக்கொண்டு நாட்கள் அசுர வேகத்தில் கடக்கும் இந்நாளில், இயற்கைக்கு அருகில் அல்லது மிக அருகில் இருப்பதற்கான சாத்தி யங்களை உங்களுக்குச் சொல்கிறேன்.
‘இன்று எத்தனை பேரைப் பார்த்தோம்?’ என்று கேட்டால், ‘இத்தனை பேர்’ என்று ஞாபகம் வரலாம். ஆனால், எத்தனை பேரைத் தொட்டோம் என்று கேட்டால்… கொஞ்சம் யோசிக்க வேண்டும்! நான் தொடுவதில் சந்தோஷப்படு கிறேன். எனக்கு ‘உயிர்த்தேன்’ அனுசுயா வைப் பிடிக்கிறது. மனதைத் தொடுவதும் உடலைத் தொடுவதும் முக்கியம். முதியவர் களுக்கு, நோய்ப் படுக்கையில் இருப்பவர்களுக்குத் தொட்டு ஆறுதல் அளிப்பது எவ்வளவு அவசியமானது என்பதை உங்கள் தோள் மீது கை வைத்துத் தோழமையுடன் பகிர்கிறேன்.
மழை நல்லது. மழையைப் பார்க்கவும் செய்யலாம். கேட்கவும் செய்யலாம். உங்கள் குழந்தையை மழை பார்க்கச் சொல்லுங்கள். அடுக்ககத்தின் வாசல்களைத் திறந்துவைத்து மழையைப் பாருங்கள். மழை பார்த்தலின் பரவச உணர்தலைப் பற்றி இன்னும் பேசுகிறேன்.
சமீபத்தில் எங்கள் ஊர் தேரோட்டம் நடந்தது. தேர் அசைந்தாலும் அழகு, நின்றாலும் அழகு. நான் இந்த வருஷம் வெளியூரில் இருந்தேன். என் நண்பன் பரமனிடம் ‘தேர் எங்கே வருகிறது?’ எனக் கேட்டால் கொஞ்சம் சங்கடத்தோடு, ‘டி.வி-யில் பார்த்துக்கொண்டு  இருக்கிறேன்’ என்கிறான். தேரோட்டத்துக்குப் போகாமலும், பிறந்த ஊருக்குப் போகத் தோன்றாமலும் இருக்கிற மனிதர்களை எப்படி நினைப்பது? ஏன் நிதானமாக எதையும் கொண்டாட முடிவது இல்லை நம்மால்?
பூ உதிர்வதுபோல, தொட்டில் குழந்தை அழுவதுபோல எதையும் இயல்பாக எடுத்துக்கொள்வது எப்படி… வாருங்களேன்… உள்ளம் திறந்து உரையாடக் காத்திருக்கிறேன்!
19.7.12 முதல் 25.7.12 வரை 044- 66808034  என்கிற எண்ணில் என்னை அழையுங்கள். பேசுவோம்… நன்றி!
அன்புடன்
வண்ணதாசன்

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in அனைத்தும், ஆனந்த விகடன், வண்ணதாசன் and tagged , , , , , , . Bookmark the permalink.

6 Responses to வண்ணதாசனுடன் பேசுங்கள் 19-7-2012 முதல் 25-7-2012வரை

 1. nilaamaghal சொல்கிறார்:

  எத்தனை பேரைத் தொட்டோம் என்று கேட்டால்… !!

  பூ உதிர்வதுபோல, தொட்டில் குழந்தை அழுவதுபோல எதையும் இயல்பாக //

  அருமையான‌ வாய்ப்பு!!

 2. siva சொல்கிறார்:

  ஒரு பெரிய வாசகன்
  இல்லை
  வாசித்து பழகியது
  தற்போதுதான் ..

  ஆனால் ஒரு பல வருடம் பழகிய
  ஒரு பரவசம்.

  பேச வேண்டும்
  ஒரு வார்த்தைகளாவது
  என்ன பேச வேண்டும் என்று
  தெரிவில்லை ஆனால் கண்டிப்பாய்
  ஒரு நாள் வண்ணதாசன் ஐயாவிடம் பேச வேண்டும்

  அன்புடன்
  ஒரு வாசகன்
  சிவா

 3. தினமும் காலையில் வண்ணதாசனின் இன்று ஒன்று நன்று உடன்தான் தொடங்குகிறது. சந்தோஷமாக இருக்கிறது ஒவ்வொரு நாளும்.

 4. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  ரெகார்டட் வாய்ஸ், கேட்கத்தான் முடியும், நேரலை உரையாடல் கிடையாது என்கிறார்கள் நண்பர்கள்

  இம்மாதிரி விகடன்/ தொலைபேசி நிறுவன கூட்டு ஏமாற்றிற்கு
  வண்ணதாசனும் கூட்டு சேர்வது வருத்தமாக இருக்கிறது

 5. J.Selvaraj சொல்கிறார்:

  வாழ்வின் அழகியலை இவ்வளவு நெருக்கமாக ,அழகாக வார்த்தைகளில் உணர்த்த வண்ணதாசனால் மட்டுமே முடிகிறது . ” இன்று ஒன்று நன்று ” அனைத்து நாட்களும் கேட்டேன் . சிறப்பான அனுபவமாக இருந்தது . இதுவரை அவரது எழுத்துக்களில் அழகியலைக் கண்டோம் . ” இன்று ஒன்று நன்று ” வாயிலாக அவரது குரலின் மூலம் வாழ்வின் அழகியலைக் கேட்டேன் . நிறைய தகவல்களை , தான் கூறும் விசயங்களுடன் கலந்து அழுத்தமாக கூற அவரால் மட்டுமே முடியும் . தங்க நாற்கரை சாலை பற்றியும் , நகர வாழக்கை குறித்தும் கூறியது அழுத்தமாக இருந்தது . நன்றி …

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s