நாஞ்சிலுக்கு-வண்ணதாசன் கடிதங்கள்

வண்ணதாசன்
அன்புமிக்க நாஞ்சில் நாடன்,
வணக்கம்.
உங்களுக்கு மின்னஞ்சல் பெட்டியைத் திறந்துபார்க்கும்
‘சீக்கு’ உண்டா தெரியவில்லை. அது ஒருவிதமான
ஒட்டுவாரொட்டி. ஒருவிதமான சூது.  சொரிமணல்.
ஆளை உள்ளே இழுக்கும்.
ஆனால், நீங்கள் அப்படியெல்லாம் லேசில் ஆழம் தெரியாமல் கசத்தில் இறங்குகிற ஆள் இல்லை.
*
நான் ‘இந்த என்னுடைய அறுபத்தாறு வயசில்,’இன்னியத் தேதி’
வரைக்கும் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பேனா என்று
தெரியாது. அவ்வளவு சந்தோஷமாக இருந்தேன் , போன திங்கட்
கிழமை சாயுங்காலம் உங்கள் வீட்டில் இருந்தபோது,
மொத்தத்திலேயே உங்கள் வீடு அம்சமாக இருந்தது. ஒரு தலைப்
பிள்ளை சூலி இருக்கிற வீடு அப்படி நிறைந்துவிடும். அதுவும்
நம்முடைய பொம்பிளைப் பிள்ளைகள், ‘உண்டாகி’ பெத்துப் பிழைக்க
வந்திருக்கிற காலம் அருமையானது.
உங்கள் மகள் ( அவள் பெயர் கூட அயத்துப் போயிற்று. எது உங்கள்
வீட்டம்மா பெயர், எது உங்கள் மகளுடைய பெயர் என்று குழம்பி
விடும் எனக்கு) ஒரு செல்லப் பூனைக்குட்டி மாதிரி உங்கள் கூடவே
இருந்ததும், கொஞ்சம் எட்டி, குளித்து முழுகின களையோடு உங்கள்
துணைவியார் இருந்ததும், ரவி அவ்வப்போதில் அடுக்கடுக்காக
சிரிக்க, நீங்கள் பேசிக்கொண்டு இருந்ததும் எல்லாம் சொல்லவே
முடியாத வகையில், என்னை நிரப்பியிருந்தது. நிறைவுதான் என்
சந்தோஷம். உங்களை இத்தனை சந்தோஷமாகப் பார்ப்பதும்
உடனிருப்பதும் இன்னும் சந்தோஷம்.
வாழ்வின் ஒரு அருமையான பருவத்தில், இறையருள் கூடி, நீங்கள்
இருக்கிறீர்கள் நாஞ்சில். எல்லாம் நல்லதுவே நடக்கும் இனி.
சொந்த வீடு, மருமகள் என எல்லாம், அடுத்தடுத்து, அதனதன் காலத்தில்
இனிது அமையும்.
உடல் நலம் பேணிக்கொள்ளுங்கள். இன்னும் பேரும் புகழும் அடையுங்கள்.
என்னைப் போன்றவர்கள், அன்றும் இன்றும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு
அப்பாலிருந்து உங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம்.
உங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம், பிரபந்தம், திரைப்படம் எல்லாம்
போல, என்னைப் போன்றவன் உங்களிடம் எதிர்பார்க்கும் நாவல், சிறு
கதைகளையும் எழுதுங்கள்.
உங்களுடன் சேர்ந்து, அடிக் கை பிடித்து நடுவதற்கு இன்னும் சில
நாற்றுகளை இந்த வாழ்வு எனக்குக் கொடுக்கட்டும்.
%
அன்புடன்,
கல்யாணி.சி.

About SiSulthan

தொகுப்பாளர்
Gallery | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged , , , , , , , . Bookmark the permalink.

நாஞ்சிலுக்கு-வண்ணதாசன் கடிதங்கள் க்கு 3 பதில்கள்

  1. nilaamaghal சொல்கிறார்:

    உங்களுடன் சேர்ந்து, அடிக் கை பிடித்து நடுவதற்கு இன்னும் சில
    நாற்றுகளை இந்த வாழ்வு எனக்குக் கொடுக்கட்டும்.
    நிறைவ‌ளிக்கும் எழுத்து!

  2. ராஜ்குமார் இளங்கோ சொல்கிறார்:

    “என்னைப் போன்றவர்கள், அன்றும் இன்றும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு
    அப்பாலிருந்து உங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம்.
    உங்கள் பேரிலக்கியம், சிற்றிலக்கியம், பிரபந்தம், திரைப்படம் எல்லாம்
    போல, என்னைப் போன்றவன் உங்களிடம் எதிர்பார்க்கும் நாவல், சிறு
    கதைகளையும் எழுதுங்கள்.”
    இவற்றையே நானும் வேண்டிக்கொள்கிறேன்.

  3. ரசிகனின் ரசனை சொல்கிறார்:

    நிறைவான வார்த்தைகள்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s