வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!

இந்திய அரசின் சாகித்ய அகாடமி ஒவ்வொரு மொழியிலும் சிறந்த படைப்பாளர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் விருதினை வழங்கி வருகிறது. 2016ம் ஆண்டில் சிறந்த தமிழ் படைப்பிற்கான விருது வண்ணதாசனின் “ஒரு சிறு இசை’ என்ற சிறுகதை தொகுப்பிற்காக வழங்கப்படுகிறது.
70 வயதாகும் இவர் திருநெல்வேலி, சிதம்பரநகரில் வசிக்கிறார். இயற்பெயர் கல்யாணசுந்தரம். “கல்யாண்ஜி’ என்ற பெயரில் கவிதைகள் எழுதிவருகிறார்.
இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 1962களில் இருந்து எழுதிவருகிறார். இதுவரையிலும் 13 சிறுகதை தொகுப்புகள், 13 கவிதை தொகுப்புகள், ஒரு குறுநாவல், 2 கடித தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். கலைமாமணி, தமிழ்பேராயம், இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல்வேறு இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தந்தை தி.க.சிவசங்கரனும் சிறந்த எழுத்தாளர். இவர் 2000ம் ஆண்டில் விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் என்னும் விமர்சன நூலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
சாகித்ய அகாடமி 1954ல் துவக்கப்பட்டது. 1955ல் வழங்கிய முதல் விருது, நெல்லையை சேர்ந்த ஆர்.பி.சேதுப்பிள்ளைக்கு, தமிழ் இன்பம் படைப்பிற்காக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
விருது குறித்து வண்ணதாசன் கூறுகையில், எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு நான் எழுதிய கடிதங்கள்தான் என்னை மேலும் எழுதத்தூண்டின. கடிதங்களை நான் முக்கியமானவையாக மதிக்கிறேன். 54 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். என்னோடு 1960களில் எழுதத் துவங்கியவர்கள் பலர் எழுத்தை நிறுத்திவிட்டார்கள். இளைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் எனக்கு நம்பிக்கையளிக்கின்றன. வாசகர்கள், இளைய படைப்பாளிகள் தமிழின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளர்களின் படைப்புகளை தேடிக்கண்டுபிடித்து வாசிக்கவேண்டும். தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தாமிரபரணி சார்ந்து தொடர்ந்து படைப்புலகில் இயங்குவேன் என்றார்.

15666132_1216645718384947_1591738458_n15673251_1216646938384825_1457412838_n 15645649_1216647025051483_490379459_n
15673357_1216647005051485_1336452180_n 15673448_1216646975051488_148544212_n

About SiSulthan

தொகுப்பாளர்
This entry was posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to வண்ணதாசனுக்கு சாகித்ய அகாதமி விருது!

 1. euro graphics சொல்கிறார்:

  வாழ்த்துக்கள்.

  Sent from my iPhone

  >

 2. harikarthikeyanramasamy சொல்கிறார்:

  வண்ணதாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

 3. Shunmugam. Chithirai mudukku theru thambi சொல்கிறார்:

  Congratulation anna

 4. Muppidathi Veemarajan சொல்கிறார்:

  Anbu nanbar Kalyanji avarkalukku ENATHU VAAZHTHUKKAL

 5. sumathi சொல்கிறார்:

  Valthukkal sir. Ipoluthu than ungal kavithaigal padithu varugiren.

 6. Thirumalaisamy P சொல்கிறார்:

  வண்ணதாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s