வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)

DSC00711
வித்யா
http://www.jeyamohan.in/93709#.WFtAAvl96Uk
சமீபத்தில் கோவையில் நடந்த புத்தகத் திருவிழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றிக் கூற விரும்புகிறேன். விழா தொடங்கும்முன் என் பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் வந்து உட்கார்ந்தார். மலர்ச்சியும், தயக்கமும் கலந்திருந்த முகம். படப்படப்பாக இருந்தார். சிறு யோசனைக்குபின் தன் பையில் இருந்த ஒரு குறிப்பேட்டை எடுத்துக்கொண்டு மேடைக்கு சென்று திரும்பினார். எனக்கு ஆர்வமாக இருந்தது. நான் அவரிடம் ”யாரிடம் கையெழுத்து வாங்கச் சென்றீர்கள்” என்று கேட்டேன் (ஏனென்றால் மேடையில் இன்னும் சில பெரியவர்களும் இருந்தனர்).
அவர், தான், திரு. வண்ணதாசன் அவர்களின் தீவிர வாசகன் என்றும், இன்று அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு சீக்கிரமே வந்திருப்பதாகவும் கூறினார். நான் மகிழ்ச்சியாக ‘நானும் அவரை காணத்தான் வந்தேன்’ என்றேன். அவ்வளவுதான். அவர் தயக்கமெல்லாம் காணாமல் போயிற்று. விழா தொடங்கும் வரையில் பேசிக்கொண்டே இருந்தார். அவர் சிறுவயது முதல் மிகுந்த கூச்சச் சுபாவம் உடையவராம். அந்த தனிமையே நூல்கள் படிக்கக் காரணமாயிருந்ததும், எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை வண்ணதாசன் நூல்களை பற்றி எழுதியதை தொடந்து இவர் வண்ணதாசன் அவர்களின் நூல்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். ஒரு சமயத்தில் தன்னையே அக்கதைகளில் கண்டு நெகிழ்ந்திருக்கிறார். தன்னுடைய தயக்கம் ஒரு பெருங்குறை அல்ல என உணர்ந்திருக்கிறார். அவருக்கான ஒரு வெளி அக்கதைகளில் இருப்பதை கண்டிருக்கிறார். அன்றுமுதல் அவர் பையில் எப்போதும் வண்ணதாசன் அவர்களின் நூல் ஒன்றினை வைத்துக்கொள்வாராம். அன்றும் வைத்திருந்தார். குடும்பத்தினரின் எதிர்ப்புகளுக்கும், பொருளாதார சுமைகளுக்கும் இடையில், தான் எப்படியாவது நூல்கள் வாங்குவது குறித்தும் பெருமிதம் கொண்டார்.
எப்போதும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் நான் பேசமுடியாமல் நெகிழ்ந்து போயிருந்தேன். நாங்கள் இருவருமே பெயரை கேட்டுக்கொள்ளவில்லை. (அந்த பெயர் தெரியாமல் போன பறவைக்கு இவ்விழா அழைப்பிதல் கிடைத்திருக்க வேண்டும் என இரண்டு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.)
வண்ணதாசன் அவர்களின் நூல்களை படித்துவிட்டு தங்கள் சிறுக் கூட்டுக்குள் இருந்து சற்றே உயரப் பறந்து நீலத்தில் கலந்தவர்களை எனக்கு தெரியும். தன் சக பாலினத்தினரை சக பயணியாக பார்க்கும் விதமும், பெண்கள் மீதான மரியாதையும், ஒரு குடும்பத்தின் மையப் பகுதி பெண் எனும் அம்சங்களும் இவர் கதைகளில் எனக்கு மிகப்பிடித்தவை.
’மனதில் காரணமின்றி அச்சமும், தாழ்வுணர்ச்சியும் உள்ளது, மன அழுத்தம் போக்கும் நூல்கள் ஏதாவது சொல்’ என்று கேட்கும் நண்பர்களிடம் நான் வண்ணதாசன் கதைகளையே பரிந்துரைக்கிறேன். எனக்கு மேடை போட்டு அறிவுரை சொல்பவர்கள்மேல் பிடித்தம் இல்லை. என்றுமே கைப்பிடித்தோ, தோள் அணைத்தோ ஆறுதல் சொல்லும் அப்பாவாக வண்ணதாசன் இருந்திருக்கிறார்.
இலக்கியம் என்ற பெயரில் பயமுறுத்தாத மிக எளிய நடை. எளிமையான மனிதர்கள். ஒவ்வொரு கதையிலும் ஏதோவொரு கதாபாத்திரத்தின் வடிவில் நம்மையே காணமுடிகிற நெருக்கம். இவைதான் நான் புரிந்துகொண்ட வண்ணதாசன் அவர்களின் கதை களம். எவ்வளவு எழுதினாலும் தீராத அளவுக்கு அவருக்கு மனிதர்கள் வாய்த்திருக்கிறார்கள். மட்டுமல்ல அவரும் அவரின் கதைகள் மூலமாக நாள்தோறும் நிறைய மனிதர்களை அடைந்து கொண்டேயிருக்கிறார். கடல் நீர் மழையாகி மீண்டும் கடல் சேர்வதுபோல, அவரை சுற்றியுள்ள நாமும் அவரின் கதைகளாகி மீண்டும் அக்கடல் சேர்கிறோம். தீராத அன்பின் பெருங்கடல்.
வித்யா
Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , . Bookmark the permalink.

One Response to வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (2)

  1. Thirumalaisamy P சொல்கிறார்:

    வண்ணதாசன் கதைகளில் நம்மையே நாம் கண்டுகொள்கிறோம்; நிஜம் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s