வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)

vannadasanசாரங்கன்
(ஜெயமோகனுக்கு   எழுதிய கடிதங்களில் இருந்து)
http://www.jeyamohan.in/93709#.WFtAAvl96Uk
ஜெ
வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களை போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை.
இவை ஒருவகை டெம்ப்ளேட் கருத்துக்கள். இவற்றைச் சொல்பவருக்கு ஒரு அறிவுஜீவிக்களை கிடைக்கின்றது. நல்ல வாசகன் நமுட்டுச்சிரிப்பு சிரிப்பான். ஆனால் இவர்களுக்கு ஒரு வகையான பொது அங்கீகாரம்தான் முக்கியம். வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இப்படி டெம்ப்ளேட் அபிப்பிரயத்துக்குள் சென்றுவிடுவோம் என்பது உண்மை. ஆனால் அதையே ஒரு நிலைபாடாகச் சொல்லி வாதாட ஆரம்பித்தாம் மேற்கொண்டு வளர்ச்சியே இல்லாமலாகிவிடும்.
இந்தக்கருத்து என்பது கர்நாடக சங்கீதக்கச்சேரி வாசலிலே போய் நின்று பொதுவாகக்கேட்டுவிட்டு, ‘ அதேபாட்டு, அதே வரி சும்மா ஸா ஸா என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்வதுபோலத்தான். அந்த இசைக்குள் செல்லவேண்டுமென்றால் ஒரு பயிற்சியும் கவனமும் தேவை. அதற்கு நமக்கு கொஞ்சம் தெரியாமலும் இருக்கலாம் என்ற அடக்கம் தேவை. அந்த இசைமரபு இசையின் நுணுக்கத்தைமட்டுமே கவனப்படுத்துகிறது. மற்ற அனைத்தையும் freeze செய்துவிடுகிறது. நுணுக்கத்தைச் சொல்ல விஷயத்தை freeze செய்யாமல் முடியாது. அந்த விஷயத்தை மிகத் திருத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள். நுணுக்கத்தை அடைவதற்குச் சிறந்தவழி பேசுதளத்தை முடிந்தவரை குறுகலாக ஆக்குவதும் மேலுமேலும் நுணுகி ஒன்றையே சொல்வதும்தான். எல்லா கிளாஸிக் ஆர்ட்டும் இதைத்தான் சொல்கிறது
வண்ணதாசனின் forte என்பது ருசிதான். அந்த ருசியே அவருடைய தர்சனம். அதை அவர் வாழ்க்கையில் உள்ள எல்லா இருட்டுக்கும் அழிவுக்கும் மாற்றாகச் சொல்கிறார். அவர் அன்பையே சொல்கிறார் என்பது அஞ்சாறு கதைகளை வாசிப்பவர்களின் எண்ணம் . உண்மையில்  அவர் எழுதிய பல கதைகள் கொடூரமான வாழ்க்கைச்சித்திரங்களைச் சொல்கின்றன. ஆனால் அவற்றை அவர் விரித்துச்சொல்வதில்லை. நீங்கள் சொல்வதைப்போல அதையெல்லாம் ஒற்றைவரியில் கடந்துசெல்கிறார். குழந்தைசெத்துப்போன அன்னையின் துக்கம் ரெண்டே வரிதான். ஆனால் ஒரு பூ விழுந்துகிடப்பதற்கு ஒருபக்கம். இது ஒரு தரிசனம். இதை வாசிக்க இங்கே நல்ல வாசகர்கள் வரவேண்டும்
ஒருகாலகட்டத்துக்கு என்று ஒரு எழுத்து உண்டு. அதுதான் trend எல்லாரும் அதையே எழுதுவார்கள். ஒருகும்பல் அத்தனை எழுத்தாளரிடம்போய் அதையே கேட்டுக்கொண்டிருக்கும். அவர்களின் தனித்தன்மையை நோக்கிச் செல்வதே நல்ல வாசகனுக்குரிய விஷயம். இன்றைக்கு வன்முறை செக்ஸ்மீறலை எழுதுவதே trend .சின்ன எழுத்தாளர்கள் அதையே எழுதுவார்கள். ஆனால் நல்ல எழுத்தாளனுக்கு அவன் உலகம் இருக்கும். அதுக்கும் வெளியுலகுக்கும் சம்பந்தமே இருக்காது. லா.ச.ராவுக்கு சௌந்தர்யம் மட்டும்தான். உங்க எழுத்திலே எங்கே துக்கம் என்று அவரிடம் கேட்டால் அது ஆபாசமான கேள்வி. மௌனியிடம்போய் அவர் கதையிலே எங்கே அரசியல் என்றுகேட்டால் அது மடத்தனம். நம் அமெச்சூர் விமர்சகர்களிடமிருந்து இலக்கியத்தைக் காப்பாற்ற நீங்கள் எழுதியதுபோல ஆணித்தரமாக எழுதவேண்டும். நன்றி ஜெமோ
சாரங்கன்

 

Advertisements

About SiSulthan

தொகுப்பாளர்
படத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், சாகித்ய அக்காதமி, வண்ணதாசன் குறித்து and tagged , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s