Category Archives: சாகித்ய அக்காதமி

ஒரு சிறு இசை

This gallery contains 18 photos.

மூக்கம்மா ஆச்சிக்கு எம்.ஜி.ஆர் படங்களைப் பிடித்திருந்தது. என்ன, மலைக்கள்ளன் கதையில் பாதியையும், தாய்க்குப் பின் தாரம் கதையையும் சேர்த்து விடுவாள். மர்மயோகி கதையையும், மகாதேவி கதையையும் அப்படித்தான்.  யாராவது “என்ன ஆச்சி? எல்லா கதையையும் இப்படி குழப்புதீங்க? “ என்று கேட்டால் , “எல்லா கதையும் ஒரே கதைதான், ஆதியிலிருந்து ஒரே கதையைத் தான் ஒன்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் ஒன்றையே எழுதுகிறாரா? (1)

சாரங்கன் (ஜெயமோகனுக்கு   எழுதிய கடிதங்களில் இருந்து) http://www.jeyamohan.in/93709#.WFtAAvl96Uk ஜெ வண்ணதாசன் படைப்புகளைப்பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைத்தொடர் பல வினாக்களுக்குப் பதில் சொல்கிறது. அவரைப்பற்றிய இரு குற்றச்சாட்டுக்களை போகிறபோக்கிலே இன்று சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று, ஒரே வட்டத்தில் சுற்றிவருகிறார். இரண்டு, அன்பு கனிவு என ஒரே விஷயத்தைச் சொல்கிறார். உக்கிரமான விஷயங்களைச் சொல்வதில்லை. இவை ஒருவகை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 9 பின்னூட்டங்கள்

சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்

This gallery contains 2 photos.

சரவணன் (http://www.jeyamohan.in/93662#.WFs-jPl96Ul) ஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்

நெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்: சாகித்ய அகாடமி விருதுபெறும் எழுத்தாளர் வண்ணதாசன் கருத்து எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, பெருமாள்புரம், சிதம்பரநகரில் வசிக்கும் வண்ண தாசன் 22.8.1946-ல் பிறந்தவர். கல்யாணசுந்தரம் என்கிற இயற் பெயரைக் கொண்ட இவர் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். 13 சிறுகதை தொகுப்புகள், 13 … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் முதல் பகுதியை படிக்க :http://www.jeyamohan.in/93505#.WFtDCPl96Uk [   2  ] வண்ணதாசனின் புனைவுலகை சுவை என்னும் சொல்லால் அடையாளப்படுத்தலாம். அவருடைய தீவிர வாசகர்கள் அனைவருமே அவர் தங்களுக்கு அளித்த தனிப்பட்ட சுவையனுபவத்தைப்பற்றியே பெரிதும் பேசுகிறார்கள். வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவர், நெல்லையின் பண்பாட்டுத் தனித்தன்மையை வெளிக்கொணர்ந்தவர், மனிதர்களின் நுண்ணிய முகங்களை வெளிப்படுத்தியவர், என்றெல்லாம் வாசகர்களால் பல்வேறு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக