This gallery contains 1 photo.
வண்ணதாசன் இருபத்திரெண்டு வருஷம் என்ன, இருநூறு வருஷம் ஆனால் கூடச் சில பேரை மறந்துவிட முடியாது. சில விஷயங்களை மறந்து விடமுடியாது. ஒவ்வொருத்தரால் ஒவ்வொன்றையும், ஒவ்வொன்றால் ஒவ்வொருத்தரையும் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம். எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்” என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது. முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு‘ என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன். இளம் பச்சையில் ஒரு சால்வையைச் சரிபண்ணிக்கொண்டு கும்பிட்டபடி வருகிறார். … Continue reading →