Tag Archives: கடிதங்கள்

கடிதங்கள்

This gallery contains 2 photos.

இப்படியே , கதை எழுதினாலும் ,கவிதை  எழுதினாலும் ,கடிதம்  எழுதினாலும்   நேற்றுவரை  நிகழ்ந்ததையே திருப்பித்  திருப்பி  நினைக்கவும்  பகிர்ந்து  கொள்ளவும்   தோன்றுகிறது . நான் இப்படியான  வாசனைகளுடனும்  ,தோற்றங்களுடனும்,அவற்றுடன்  சம்பந்தப்பட்ட  இடங்களுடனும் மனிதர்களுடனும் தானே  பேசவும்  எழுதவும் ,இருக்கவும் ,சிரிக்கவும் ,கலக்கவும்  முடியும். அவைகளைத்தானே  நானும்  செய்து  கொண்டிருக்கிறேன் . கல்யாண்ஜி .. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானிக்கு- வண்ணதாசன் கடிதங்கள்

This gallery contains 6 photos.

வண்ணதாசன்  (வண்ணதாசன் கடிதங்கள் வீட்டிற்கு வந்ததும் என் மகள் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு வண்ணதாசன் கவிதைகள், கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவள் அசந்து வைக்கும்போது நான் படித்தேன்.  அவளுடைய எண்ணங்களின் வண்ணங்களை உடனே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பகிர்தலில் தான் அழகு மேலும் அழகாய்த் தெரிகிறது. அவரது கையெழுத்தைப் படித்திருந்தால் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அதெல்லாம் ஒரு காலம்!

அதெல்லாம் ஒரு காலம்! அதெல்லாம் ஒரு காலம்! நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடை களுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல… உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும். மு.பழனி, பமேலா ராதா, … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது  http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906 31-10-2006 அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு,  வணக்கம்.  சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும், நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்