Tag Archives: சுல்தான்

மரம்

மரம் எங்கள் வீட்டிலிருந்து பார்த்தால், சீட்டுக்கட்டு க்ளாவர் மாதிரி இருக்கும். எத்தனையோ வருஷங்களாக அந்த மரத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அப்படியேதான் இருக்கிறது. இப்போதும் ஒரு சாயலில் அது பச்சை க்ளாவர்தான். முன்பைவிட அடர்த்தியாக, அழகாக, கிளையும் இலையுமாக இருக்கிறது. அறுபது வருடங்களில் நமக்கு என்னவெல்லாம் ஆகிவிடுகிறது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை. செழிப்பாக இருந்தது. வாலிபம் திரும்பின … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

‘அபிதா’

நான் பழுத்திருந்தபோது பழம் கடிக்க வராமல் உளுத்துவிட்டதும் புழு பொறுக்க ஓடி வரும் மனம் கொத்தி நீ!’ – இதை நான் எழுதி இருபத்தைந்து வருடங்கள்கூட இருக்கலாம். கவிதைக்கு ‘அபிதா’ என்ற தலைப்புக் கொடுத்திருந்தேன். லா.ச.ரா-வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக்-கிடக்கிற லா.ச.ரா–வின் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஒட்டுதல்-வண்ணதாசன்

This gallery contains 1 photo.

ஒட்டுதல்-வண்ணதாசன் ஒட்டுதல்  வண்ணதாசன் குளியலறையை விட்டு வெளியே மஹேஸ்வரி வரும்போது செஞ்சு லட்சுமியும் அவள் கணவரும் ஹாலில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அம்மா குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள். செஞ்சுதான் பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘எங்கே போகப் போகிறாள். ஏற்கனவே பார்த்த ஆபீஸ். ஏற்கனவே பார்த்த வேலை ‘ என்று என்னென்னவோ சொல்வது கேட்டது. … Continue reading

More Galleries | Tagged , , | 1 பின்னூட்டம்

அதெல்லாம் ஒரு காலம்!

அதெல்லாம் ஒரு காலம்! அதெல்லாம் ஒரு காலம்! நான்கு நாட்கள் வெளியூருக்குப் போய்விட்டு வந்தால், வீட்டில் எட்டுக் கடிதங்களாவது வந்திருக்கும். தொட்டிலில் கிடக்கிற பிள்ளையைக்கூட அப்புறம்தான் பார்க்கத் தோன்றும். பிரயாண அலுப்பு மாறாத முகமும், கசங்கினஉடை களுமாக ஒவ்வொரு கடிதத்தையும் வாசிக்க வாசிக்க, விலாப்புறத்தில் மட்டுமல்ல… உடம்பு முழுவதும் சிறகுகளாக முளைத்திருக்கும். மு.பழனி, பமேலா ராதா, … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள்

வாசகர் வட்டம்  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் http://vasagarvattam.blogspot.com/2008/03/blog-post.html  வண்ணாத்தி பூச்சியாய் வண்ணதாசன் சிறுகதைகள் பாண்டித்துரை வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளையும் என்னால் படிக்க இயலவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டுள்ள 117 சிறுகதைகள் கொண்ட தொகுப்பில் 60க்கும் மிகுதியான சிறுகதைகள் படித்துள்ளேன். திரு சுப்ரமண்யம் ரமேஷ் குறிப்பிட்ட கதைகளில் தனுமை தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் மதிப்புரைகள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

”அகமும் புறமும்” பனை ஓலைகள்

”அகமும் புறமும்” பனை ஓலைகள் வெளியே உட்கார்ந்திருந்தோம். ஒரு வாகனம் நம்மைக் கடந்தது போல, தைப் பொங்கல் தினம் போய்க்கொண்டு இருப்பதை உணர முடிந்தது. சாயங்கால வெயில் மாதிரி அது ஒரு அபூர்வமான விதத்தில் கண் முன்னால் நகர்ந்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு பண்டிகை வந்துவிட்டுப் போகும்போதும் ஒருவித உணர்வு உண்டாகிறது. துக்கம் என்று எடுத்துக்கொண்டால் துக்கம்; … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன் | Tagged , , , | 3 பின்னூட்டங்கள்

யாரும் இழுக்காமல் தானாக…

யாரும் இழுக்காமல் தானாக…  வண்ணதாசன்  சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார். எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது. பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

வண்ணதாசன் கல்யாண்ஜி

வண்ணதாசன்… எஸ்.கல்யாணசுந்தரம் கல்யாண்ஜி நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன்.திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்…நம் அனைவருக்கும் சொந்தமானவர்.பிரபல இலக்கிய விமரிசகரும்,சாகித்ய அகடமி..விருதும் பெற்றவருமான..பொது உடமைவாதியான தி.க.சி., என எல்லோராலும் அறியப்படும்..தி.க.சிவசங்கரனின்மகன் …1962ல் தீபம் இதழில் எழுத ஆரம்பித்தவர்.பின் பல சிறுகதைகள் பல பத்திரிகைகளிலும் வண்ணதாசன் என்ற பெயரில் எழுதினார். பழக மிகவும் இனியவர்…..மறந்தும் கடினமான சொற்களைக் கூறாதவர்.இவர் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது

கல்யாண்ஜி (வண்ணதாசன்) – தீப. நடராஜனுக்கு எழுதியது  http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=906 31-10-2006 அன்புமிக்க தீப.நடராஜன் அவர்களுக்கு,  வணக்கம்.  சற்று முந்தித்தான் ராஜு ஆட்டோவில் புறப்பட்டான். எத்தனை வயதானாலும், நமக்கும் சரி பிள்ளைகளுக்கும் சரி, இப்படிப் பத்துநாள் எட்டிப் பார்த்துவிட்டுப் போவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. சொல்லப் போனால், என் தனிப்பட்ட அனுபவத்தில், அவர்கள் கைப்பிள்ளைகளாக இருக்கும்போதுகூட இந்த அளவுக்குக் … Continue reading

Posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்