Tag Archives: மணலுள்ள ஆறு

மணல் உள்ள ஆறு தொகுப்பு பற்றி மரபின் மைந்தன் முத்தையா

This gallery contains 1 photo.

புரிதலின் பிராவாகம் அது அங்கே இருக்கிறது என்று சொல்வதில் எந்தப் புகாராவது இருக்கிறதா என்ன? மேலோட்டமாகப் பார்த்தால் இதுவொரு சாதாரண வாக்கியம். அதன் அடியாழத்திலோ “அது அது அப்படித்தான்” என்கிற புரிதலின் பரிவு நீண்டு கிடக்கிறது.புரிதல், பக்குவத்தின் ஆரம்ப நிலை.புரிதலின் பரிவு,பக்குவத்தின் ஆனந்த நிலை. அப்படியோர் ஆனந்த நிலையின் பிரவாகமாய்ப் பெருகுகிறது கல்யாண்ஜியின் “மணல் உள்ள … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வரைபடம்

This gallery contains 1 photo.

    வாசலில் வந்துநின்று கெஞ்சிய விற்பனைப் பெண்ணிடம் வாங்கியது அந்த உலக வரைபடம். படுக்கையறைத் தலை மாட்டில் தொங்கவிடப்பட்ட அதைப்பார்த்து நம் ஊர் எங்கே என்றாள். நம் வீடு இருக்கும் இடம் எது என்பதற்கும் வரைபடத்தில் புள்ளியில்லை. அவள் பள்ளிக் கூடம், அவள் சினேகிதி சுலேகா வீடு பற்றி மேற்கொண்டு என்னிடம் கேட்பதில் பயனில்லை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அவரும் நானும்

This gallery contains 2 photos.

  சந்தடியற்ற ரயில் நிலையத்தில் பரிச்சயமற்ற அவரும் நானும். ‘இந்த இடத்தில் ஒரு பெரிய அரசமரம் உண்டு தெரியுமா?’ என்றார். ‘ஏகப்பட்ட சிட்டுக் குருவிகள் அடைகிற சத்தம் கேட்டிருக்கிறீர்களா?’ என்றேன். அவர் இறந்த காலத்தில் குனிந்து பழுப்பு இலைகளைப் பொறுக்க, நான் மூச்சிழுத்து நுகர்ந்துகொண்டிருந்தேன் பறந்து போன எச்சச் சொட்டுகளை, தண்டவாளங்கள் விம்மிக்கொண்டிருக்க. …………………………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வெயில் முடிவு

This gallery contains 1 photo.

ஒரு முடிவு செய்தது போல் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டிருந்தது செடி. ஒரு முடிவும் செய்ய முடியாதது போல் செடியடியில் அசையாதிருக்கிறது சாம்பல் பூனை. ஒரு முடிவும் செய்ய அவசியமின்றி ஊர்ந்துகொண்டே இருக்கிறது செடியின் மேல் வெயில். ………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எளிய கேள்விகளின் மேல்

This gallery contains 2 photos.

    சாய்ந்து வளர்ந்து பூச்சொரியும் சிவப்பு மரமல்லி மரம் தன் கிளைகளைப் பாதிக்கு மேல்  தெருவுக்குத் தர அனுமதித்து சுற்றுச் சுவரை இடித்துவிட்ட கருணைமிக்கவர் யார் இந்த வீட்டில்? சதா யாருடனாவது பேசிக்கொண்டே பழுதுற்ற கண்ணுடன் சூரியன் பார்த்துச் சிரிக்கும் முதிய காவலரின் கனவில் சமீபத்தில் அம்மன்புரத்துப் பனைவிடலி அசைந்ததுண்டா? ஏழு செவலைக்குட்டிகளுக்கும் இன்னும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யாரிடம்

This gallery contains 1 photo.

    அவுரிச் செடி மூட்டில் அமர்ந்திருக்கும்  இப் பறவையின் பெயர் என்னவென யாராவது கேட்டால் சொல்லிவிடலாம். பெயர் தெரிந்தது போல் எல்லோரும் பெயர் தெரியாத பறவையைத் தாண்டிப் போய்க் கொண்டிருகிறார்கள். யாரிடமாவது சொல்வதற்குள் பறந்துவிட்டதெனில் யாரிடம் சொல்வேன் செம்போத்து எனும் பெயரை? ……………………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தெரிந்து செயல் வகை

This gallery contains 2 photos.

தெரியும். கொஞ்சம் உரைநடைத்தன்மை அதிகம். தெரிந்துதான் இப்படி எழுதினேன். அல்லது எழுதின உடனேயே தெரிந்துகொண்டேன், இவை இப்படி இருக்கின்றன என்று. எப்படி எப்படியெல்லாமோ இருக்கிற, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என உரிமம் பெற்றது போல எழுதப்படுகிற இன்றைய நவீன கவிதைகளின் போக்கில், இப்படி இருப்பதற்கும் இடமும் பொருளும் ஏவலும் உண்டு நிறையவே. கதைக்காரர்கள் அனுபவச் சாற்றின் கடைசிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இரண்டு யாரோக்கள்

This gallery contains 1 photo.

  யாரோ தயாரித்த பானம். யாரோ அருந்திய குவளைகள். இரண்டு யாரோக்களின் இனிப்பையும் மொய்க்கின்றன கருப்பு எறும்புகள் ஒரே சமயத்தில். …………………………………………………………………..கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மணலுள்ள ஆறு

This gallery contains 1 photo.

ஆச்சி இறந்து அனேக காலம் ஆயிற்று. அவளுடைய மர அலமாரியில் வேறெதையோ தேடுகையில் கிடைத்தது ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும் அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும். எந்த ஆற்றில் அவள் குளிக்கையில் தவறி விழுந்ததோ, எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக ஒட்டிய மணல் சோப்பில். தெரியாமல் போயிற்று இத்தனை காலமும் ஓடிக்கொண்டு இருந்திருக்கிறது மர … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஆறாவது பயணியின்

This gallery contains 1 photo.

      இந்த நீண்ட பிற்பகல் பயணத்தில் இப்போது நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கலாம். உடன் வராத இந்த வாகனத்தின் ஆறாவது பயணியின் ஞாபகங்கள் செய்த விடுதலையில் நீங்கள் விழித்தும் இருக்கலாம். ஓட்டுனரின் விருப்பப் பண்பலை ஒலிபரப்பும் ஒரு பாடலின் ஒற்றை வரியில் புதிய அர்த்தங்களைக் கண்டடையும் உங்கள் புன்முறுவலை ஒளித்துவைக்கலாம். எதற்கு ஒளிப்பதென, இன்னும் அகலச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எப்படியும் போகிறவை

This gallery contains 1 photo.

செம்மண் தூவிய முதுகுடன் தேயிலைத் தோட்டங்களில் நடக்கிறது யானைக் குடும்பம். தாளைத் தேர்ந்தெடுத்துத் தின்கிறது தாய்ப் பசு வாழை மட்டையை விட்டுவிட்டு. கணினி மையத்தில் வெள்ளுடம்பு நிர்வாணம் கண்டு கரமைதுனம் செய்கிறான் பதினாறான். காவல் நிலையத்தில் செத்துக் கிடக்கிறான் காக்கி வன்புணர்வில் சிதைந்த கருப்புப் பெண். ஒரு குத்து மணல் இல்லை ஓடுகிற ஆற்றில். எந்தப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குறுக்கிட்ட என்னை

This gallery contains 2 photos.

அந்தக்காட்சியே சற்று வினோதமாக இருந்தது. மிகச் சிறிய வீட்டின் பக்கவாட்டு விஸ்தரிப்பாக செங்கல் கட்டுமானம் ஆகிக்கொண்டிருந்தது. இடம் பெயர்ந்து எங்கோ காணாமல் போன பித்தளைச் செம்பொன்று காலத்தில் சரிந்த நார்க்கட்டில் கீழ் இருந்தது. மிக உரத்த வசைகளைச் சொல்லி பாம்படம் அணிந்த முதிய கிழவியை சீக்கிரம் செத்துப் போகச் சொன்னான் போதையில் இருந்தவன். தென்னோலைச் சிலுவையை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நிறமற்ற

This gallery contains 1 photo.

    இத்தனை நீலச் சிறுமீன்கள் மொய்க்கும் நீலக் குளத்தில் நீச்சல் தெரியாமல் குதித்தேன். இப்போது நீலமாக நீந்துகிறேன் குளமும் மீன்களும் நிறமற்ற பளிங்காக. ………………………………………………………………………………………………..கல்யாண்ஜி … ….. ….. …. …….. …… …. …. ….. …… ……. … … ……. ….. …. ….. … ……. …. … … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறவையையும் சேர்த்து

This gallery contains 1 photo.

இந்தக் கிளையில் அந்தப் பறவை அமர்ந்திருந்ததை இந்தக் கிளையில் அமர்ந்து அந்தப் பறவை பறந்து சென்ற பின்னரும் இந்தக் கிளை சொல்லிக்கொண்டிருக்கிறது. மரம் தன் கிளையை, அந்தப் பறவையையும் சேர்த்து நம்புகிறது பூரணமாக. …………………………………………………………………….கல்யாண்ஜி …. . ………. …. ………. ………. ………. ……….. ………எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பின் நிகழவிருப்பவை

This gallery contains 1 photo.

இந்தப் புகைப்படத்தில் இடது புறமிருந்து நாலாவதாக நிற்கிறேன். நான் அடிக்கடி விருப்பத்துடன் அணியும் கட்டமிட்ட சட்டை என்னை உங்களுக்கு நினைவூட்டும். இந்தக் கவிதைத் தொகுப்பைப் பெற்றுக்கொண்டவர் கலந்துகொள்ளும் கூட்டமுண்டு எதிர்வரும் சனிக்கிழமை. நீங்களும் அழைக்கப் பட்டிருக்கலாம். வெளியிட்ட அந்தப் பெண் தான் இப்போது இல்லை. முகத்துச் சிரிப்பில் தற்கொலைக்குறிப்பின் முன்னடையாளம் எதுவும் காணோம். சமீப காலக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எல்லாம் ஒரு

This gallery contains 1 photo.

மகான் இறந்து போனார். மகான் இருக்கிறார். நானும் இறப்பேன். நானும் இருப்பேன். எல்லாம்    ஒரு நம்பிக்கைதான்.   ……………………………………………………………………கல்யாண்ஜி

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்